திருப்பதி கோயிலுக்கு செல்ல அலிபிரியில் உள்ள திருமலைக்கு செல்லும் நடைபாதை வழியாக  பக்தர்கள்  திருமலைக்கு சென்று வருகின்றனர். இந்த நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் வெயில் நேரத்தில் இளைப்பாற மேற்கூரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கூரை அமைத்து பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதில் பல இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே, அதை பழுது பார்த்து, சீரமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஏற்றுக் கொண்டு கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வருகிறது. 


தற்போது கொரோனா காரணமாக நடைபாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இப்பணிகளை விரைவாக நிறைவு  செய்ய தேவஸ்தானம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே, வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதையை மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு மாதத்திற்குள் பழுது பார்க்கும் பணிகளை நிறைவு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. 


ALSO READ | Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 208,921 பேருக்கு கொரோனா


 


ஆனால் நடைபாதை வழியாக திருமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் சந்திரகிரியில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு மார்கம் வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம்  மேலும் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, அலிபிரியிலிருந்து, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைக்கு செல்ல, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், இலவச பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சென்ற மாதம் வேகமாக பரவி வரும் கொரோனா (Corona Virus) காரணமாக மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்ட நிலையில், திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையம், திருப்பதியில் உள்ள விஷ்ணு சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறைகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை போல பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


ALSO READ | பக்தர்களுக்கு எச்சரிக்கை! திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR