திருப்பதி பெருமாளுக்கே அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! நன்கொடையால் ஏற்பட்ட வில்லங்கம்
RBI Penalise Tirupati Balaji: திருப்பதி கோயிலில் காணிக்கையாக வந்த 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
திருப்பதி கோயிலில் காணிக்கையாக வந்த 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்ய அனுமதி மறுத்து வந்த நிலையில், தற்போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடையை வங்கிக் கணக்கில் வைக்க தடை விதித்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | எம்ஜிஆர்-க்கு துரோகம் செய்யும் இபிஎஸ்... அடிப்படையை மாற்றுகிறார் - டிடிவி தடாலடி!
உலகிலேயே பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை திருமலை திருப்பதி தேவஸ்தானம். இந்தியிஆவில் உள்ள பல்வேறு பணக்கார மத அறக்கட்டளைகளுள் ஆந்திர மாநிலத்தின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முதலிடத்தில் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து அதிக அளவு நன்கொடைகளை பெறுகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம். சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (Foreign Contribution Regulation Act) இன் கீழ் பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | இந்தியாவை விட தங்கம் மிகவும் மலிவாக கிடைக்கும் உலகின் ‘சில’ நாடுகள்!
சமீபத்தில் பெயர் தெரியாத வகையில் ரொக்கமாக வெளிநாட்டு பணம் அதன் ‘உண்டியலில்’ போடப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் அந்தப் பணத்தை நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமலையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோவில் மற்றும் 70 கோவில்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலின் தொடர்ச்சியாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்துள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக சிக்கல் தொடர்ந்து வந்த நிலையில், மத்திய அரசின் தலையீட்டைக் கோரிய திருமலை திருப்பதி தேவஸ்தானம், பதிலுக்காக காத்திருந்த நிலையில், ஆர்பிஐ, விதித்துள்ள அபராதமும், நோட்டீசும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
மேலும் படிக்க | போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ