திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தங்கும் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடு
திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் தடுப்பூசி (Vaccination) செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் திருப்பதியில் (Tirupati) உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் கொரோனா (Coronavirus) பரவல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமையில் நடந்தது. அதில்,
ALSO READ | COVID-19 பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவின் பல நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்
வேகமாக பாரி வரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டது வருகிறது. இதனால் மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து அவ்வப்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கேட்டு கொண்டார். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை குறித்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையம், திருப்பதியில் உள்ள விஷ்ணு சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறைகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை போல பயன்படுத்த வேண்டும். மேலும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்றும் ஒளிபரப்பு மூலம் கொரோனா குறித்து பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR