புதுடில்லி: நாடாளுமன்றத்தின் (Parliament) மேல் சபையான மாநிலங்களவையில் (Rajya Sabha) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20, 2020) உறுப்பினர்கள் உருவாக்கிய காட்சி அவையின் கௌரவத்தை குலைக்கும் வகையில் இருந்தது. இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜகவின் (BJP) 6 மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்களின் இந்த நடத்தையைக் கண்டித்து தேசிய தலைநகர் தில்லியில் (Delhi), பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவ்டேகர், பிரஹ்லாத் ஜோஷி, பியூஷ் கோயல், தவார்சந்த் கெஹ்லாட் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். ராஜ்நாத் சிங் (Rajnath Singh), மாநிலங்களவையில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்று கூறினார்.


ALSO READ: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது..!!!


அவர் கூறுகையில், "இன்று மாநிலங்களவையில் நடந்தது வருத்தமளிக்கும், துரதிர்ஷ்டவசமான மற்றும் வெட்கக்கேடான விஷயமாகும். சபையில் கலந்துரையாடல்களை நடத்துவது ஆளும் தரப்பினரின் பொறுப்பாகும். ஆனால் இதில் தகுந்த நாகரிகத்தை பராமரிப்பது எதிர்க்கட்சியின் கடமையாகும். இதுபோன்ற ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் சில அரசியல் காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை." என்று தெரிவித்தார்.  


இரண்டு வேளான் மசோதாக்களுக்கும் (Farm Bills) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


ALSO READ: மத்திய அரசின் விவசாய மசோதாக்களை BJP-ன் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றன: MKS


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR