என்னதான் திறமையாக படிக்கும் மாணவராக இருந்தாலும் தேர்வு என்று வந்துவிட்டால் பயம் மன அழுத்தத்தை தொற்றிவிடும். அந்த மன நிலையோடு படித்தால் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் போகும். இதன் தாக்கம் தேர்வின் முடிவில்தான் தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் தற்போது சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. அந்தவக்யில் இந்த தேர்வை ரிலாக்ஸாக எதிர்கொள்ள உசில டிப்ஸ் உங்களுக்காக....


> தேர்வின் போது மனதில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் நேர்மறை எண்ணங்கள். மற்றவர்களை விட உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் நேர்மறையான உற்சாகம்தான் உங்களை வெற்றியடைய வைக்கும்.


> தொடர் செயல்களை ஒரு பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இதனால் பரபரப்புகள், டென்ஷன்களின்றி தெளிவாக இருக்க முடியும். 


> இடங்கள் மாறி மாறி படிக்கும்போது ரெஃப்ரெஷாக இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் இடம் ஒலிகள் இல்லாத அமைதியான இடமாக தேர்வு செய்யுங்கள். 


> தேர்வின் போது கட்டாயம் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். நன்கு தூங்கி ஓய்வெடுத்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் நீங்கள் படிக்கும் விஷயம் எளிதாக மனப்பாடமாகும். 


> ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். உணவும் உங்கள் ஞாபக சக்திக்கு முக்கிய காரணம். 


> தேர்வுக்கு முன் படித்தவற்றை ஒரு மேற்பார்வைப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்காக பதட்டமான மனநிலையில் பார்க்காதீர்கள் பின் எல்லாம் மறந்த நிலையில்தான் இருப்பீர்கள்.


> உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் மன அழுத்தம் போகும். இதனால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்.