புதுடெல்லி: மத்திய போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில போக்குவரத்து துறைகள், ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறினால், அவருக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், அவர்களின் அபராதம் பணத்தை முழுவதும் செலுத்தும் வரை, அதுக்குறித்து மின்னணு கண்காணிப்பு பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து விதிகளை மீறினால், போலீஸ்காரர்கள் அதைப் புகைப்படமாக எடுத்து, உங்களுக்கு ஒரு சலான் அனுப்ப முடியாது. இனி சலான் அனுப்ப வேண்டும் என்றால், மின்னணு முறை கண்காணி பதிவுகள் அவசியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

MoRTH தகவலை ட்வீட் செய்தது:
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை அமல்படுத்துவதற்காக திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 1989-ன் (Amended Motor Vehicles Act 1989) கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், சலான் வழங்குவதற்கு மின்னணு கண்காணி சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "விதிமீறல் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் அனுப்பப்படும் மற்றும் மின்னணு கண்காணிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட பதிவுகள் சலான் தீர்க்கப்படும் வரை சேமிக்கப்பட வேண்டும்" என்று மத்திய அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.


 



இந்த ஏற்பாடுகள் சிவப்பு விளக்கு-நெடுஞ்சாலையில் செய்யப்படும்:
புதிய விதிகளின் கீழ், போக்குவரத்து விதிகளை அமல்படுத்த மின்னணு சாதனங்கள் முக்கியமாக பயன்படுத்தப்படும். இந்த மின்னணு சாதனங்களில் மோஷன் கேப்சர் பிக்சர் கேமராக்கள் (வாகன வேகத்தை கண்டறியும் கேமராக்கள்), சிசிடிவி கேமராக்கள், வேகத்தை அளவிடும் சாதனம், உடலில் அணியும் கேமராக்கள், மோட்டார் டாஷ்போர்டு கேமராக்கள் (அறிவிப்பு பலகை கேமிரா),  வாகன எண்ணை அடையாளம் காணும் தானியங்கி சாதனங்கள் (ANPR), எடை இயந்திரங்கள் மற்றும் பிற மின்சார சாதனங்கள் அடங்கும். 


ALSO READ | டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை!


போக்குவரத்து விதிகளுக்கு இணங்க அனைத்து மின்னணு சாதனங்களும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அதிக ஆபத்து மற்றும் மிகவும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சாலைகளில் நிறுவப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இது தவிர, குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட அனைத்து முக்கிய நகரங்களின் முக்கிய சந்திப்புகள் மற்றும் ரவுண்டானாவில் இந்த சாதனங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் கூறியுள்ளது.


 



இந்த மாநிலங்களில் டிஜிட்டல் உபகரணங்கள் நிறுவப்படும்:
உத்தரபிரதேசத்தில் கான்பூர், லக்னோ, காஜியாபாத், வாரணாசி உட்பட 17 நகரங்கள், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூர், உஜ்ஜைன் உள்ளிட்ட 7 நகரங்கள், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், உதய்பூர், கோட்டா உட்பட 5 நகரங்கள், மகாராஷ்டிராவின் மும்பை, புனே, கோலாப்பூர், நாக்பூர் உள்ளிட்ட 19 நகரங்கள், ஜார்க்கண்டில் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உட்பட 3 நகரங்கள், குஜராத்தில் சூரத், அகமதாபாத் உட்பட 4 நகரங்கள், பீகாரில் பாட்னா, கயா உட்பட 3 நகரங்கள், டெல்லி, அரியானா, சண்டிகர், ஜம்மு -காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 132 நகரங்களில் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் நிறுவப்படும்.


ALSO READ | இனி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. மீறினால் கடும் நடவடிக்கை!


எதற்ககெல்லாம் அபரதாம் விதிக்கப்படும்?
1. அதிக வேகம்
2. காரை நோ பார்கிங் இடத்தில் நிறுத்துதல்
3. ஓட்டுனர் அல்லது பின் இருக்கையில் சவாரி செய்பவரால் விதிகளை மீறுதல்
4. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வது.
5. சிகப்பு விளக்கை தாண்டுதல்.
6. வாகனம் ஓட்டும்போது மொபைலில் பேசுவது 
7. ஓவர்லோடிங்
8. சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது. 
9. சரக்கு வாகனத்தில் பயணிகளை அழைத்து செல்வது.
10. நம்பர் பிளேட்டில் குறைபாடு அல்லது மறைது வைக்கப்படும் நம்பர் பிளேட்.
11. வாகனத்தில் அதிக உயரத்திற்கு பொருட்களை ஏற்றி செல்வது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR