ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் எனும் பெருமை கொண்ட ஷின்சோ அபே,  நாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது, கடற்படை வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடற்படையில் பணியாற்றிய அவர், ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அரசை எச்சரித்துள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரசின் நாளாடேனா ஜகோ பங்களாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் பாஜக நெருப்புடன் விளையாடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மனுக்கள் : மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்


ஷின்சோ அபேவைக் கொலை செய்தவர் ஜப்பானிய கடற்படையில் மூன்று வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு எந்த ஓய்வூதியமும் கிடைக்கவில்லை.  அக்னிபாத் வீரர்களும் நான்கு வருட சேவைக் காலம் முடிந்த பிறகு ஓய்வூதியம் பெற மாட்டார்கள். ஒரு முன்னாள் ராணுவ வீரரால் நிகழ்ந்த ஷின்சோ அபேவின் மரணம், அக்னிபாத் திட்டம் குறித்த மக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அக்கட்டுரை கூறியுள்ளது.


எனினும் திரிணாமுல் காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. நமது நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை எனவும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த விஷயத்தை அரசியலாக்க முயற்சிப்பதாகவும், மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறினார்.


மேலும் படிக்க | அக்னிபாத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... மோடி சொல்வது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR