Shinzo Abe Death News: ஷின்சோ அபேவை கொன்றது ஏன்? - கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!

Shinzo Abe Death News: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் தொடர்பான அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jul 8, 2022, 05:28 PM IST
  • அபேவை சுட்டுக்கொன்ற முன்னாள் கடற்படை வீரர்
  • வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரத்யேக துப்பாக்கி
  • கொலையாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்
Shinzo Abe Death News: ஷின்சோ அபேவை கொன்றது ஏன்? - கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்! title=

ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் எனும் பெருமைக்குறியவர் ஷின்சோ அபே. நவீன ஜப்பானின் சிற்பி என வர்ணிக்கப்படும் இவர் தனது 67 வயதில் கடந்த 2020-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பெருங்குடல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷின்சோ அபே மருத்துவரின் அறிவுறுத்தலால் இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே மேற்கு ஜப்பானின் கியோட்டோ நகருக்கு அருகில் உள்ள நாரா எனும் இடத்திற்கு இன்று வருகை தந்த ஷின்சோ அபே அங்கு நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் குண்டு துளைத்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு பல மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அபே இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை காக்க மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா குறிப்பிட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Shinzo Abe

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஷின்ஷோ அபேவின் மறைவை ஒட்டி நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | Shinzo Abe Death News: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்

இந்த நிலையில் ஷின்சோ அபே கொலைக்கு காரணமாக நபர் குறித்த அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 41 வயதாகும் டெட்யா யமகாமி என்பவரை ஜப்பான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அபேவை சுட்ட பின் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது அவர் கைது செய்யப்பட்டார். 

இவர் நாரா பகுதியை சேர்ந்தவர். ஜப்பான் கடற்படை என அழைக்கப்படும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் வீரராவார். 

ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவரது நடவடிக்கையால் இவர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே அபேவை பழிவாங்க நீண்ட நாட்களாக திட்டம் தீட்டிய டெட்யா யமகாமி அவரை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளதாக தவல்கள் வெளியாகி வருகின்றன. 

Abe Assisin

மேலும், அபேவை கொலை செய்ய வீட்டிலேயே பிரத்யேகமாக துப்பாக்கியை தயாரித்துள்ளார். அவ்வாறு தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைக்கொண்டே இந்த துப்பாக்கிச்சூட்டை அவர் நிகழ்த்தியதும் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவதற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் யமகாமி கருப்பு நிற பேக் மற்றும் கண்ணாடி அணிந்துக்கொண்டு க்ரே டீசர்ட் உடன் அவர் நிற்பது தெளிவாக தெரிகின்றனது. அபேவை சுட்ட பிறகு அவர் அங்கிருந்து தப்போட முயன்றார். இருப்பினும் பாதுகாப்பு வீரர்கள் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News