அக்னிபாத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... மோடி சொல்வது என்ன?

அக்னிபாத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 20, 2022, 05:44 PM IST
  • அக்னிபாத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பேச்சு
  • அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு
  • கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர்
 அக்னிபாத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... மோடி சொல்வது என்ன? title=

மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக 4 வருடங்கள் நாங்கள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அதற்கு பிறகு என்ன செய்வது போன்ற கேள்விகளுடன் இளைஞர்களில் ஒரு தரப்பினரும், நாட்டுக்கு சேவை செய்ய காண்ட்ராக்ட்டா என்று மற்றொரு தரப்பினரும் கொதிப்பில் இருக்கின்றனர்.

Agnipath

அதுமட்டுமின்றி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டன. மேலும், பாஜக தலைவர்களின் வீடுகளும், அலுவலகங்களும் தாக்கப்பட்டன.

நிலைமை இப்படி இருக்க, அக்னி வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் வாட்ச்மேன், முடித்திருத்துதல் உள்ளிட்ட வேலைகள் அளிக்கப்படுமென பாஜகவினர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது.

Bharat Bandh

இதற்கிடையே இளைஞர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இத்திட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது மத்திய அரசு.

 

இப்படிப்பட்ட சூழலில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரத் பந்த்தும் நடந்தது. ஆனால் அக்னிபாத் திட்டம் குறித்து மோடி எதுவும் சொல்லாமல் இருந்தார்.

மேலும் படிக்க | அக்னி வீரர்களுக்கு வேலை : அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் ஆனந்த் மஹிந்திரா

இந்நிலையில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக மோடி இன்று கர்நாடகா சென்றிருக்கிறார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், “சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில், அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும்” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அக்னிபாத் : கடும் எதிர்ப்புக்கு இடையே ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட ராணுவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News