திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்!
திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. திரிபுரா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

சாரிலம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ராமேந்திர நாராயண் டெப்பர்மா மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மார்ச் 12 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவை ஆளும் சிபிஎம் கட்சியை தோற்கடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.