தெற்கு திரிபுராவில் சிறுமியை கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்த பிறகு தூக்கி வீசப்பட்ட மைனர் பெண் வழக்கில் போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் புதன்கிழமை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் நிகழ்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெடுதலை செய்த சமூக ஊடக நட்பு


முக்கிய குற்றவாளியான 21 வயதுடைய ஆண், மைனர் பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாகப் பழகினார், பேஸ்புக் சமூக ஊடகத்தில் நட்பாக பழகிய அந்த நபர், மைனர் சிறுமியை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் சந்திக்கும்படி ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிரார்.


மைனர் பெண், பூங்காவிற்கு வந்து சந்தித்தபோது, புகைப்படங்களை கிளிக் செய்த ஆண் நண்பரிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று சிறுமி தடுத்திருக்கிறார். அவர் தனது எதிர்ப்பையும் மீறி சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதும், தான் பிளாக்மெயில் செய்யப்படுவதை உணர்ந்த சிறுமி, சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சிறுமியால் தப்பித்துச் செல்ல முடியவில்லை.


மேலும் படிக்க | ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்


வெளியே சந்திக்க கூப்பிட்ட நண்பர்


"பிரதான குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார், அங்கு அவர் சிறுமியின் எதிர்ப்பையும் மீறி சில புகைப்படங்களை கிளிக் செய்தார். பிளாக்மெயில் செய்யப்படுவதை உணர்ந்த சிறுமி, சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை” என்று உதய்பூரின் கலெக்டர் நிருபம் தத்தா தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


கூட்டு பாலியல் பலாத்காரம்


முக்கிய குற்றவாளி 17 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், அவருடன் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து, சிறுமையை பலாத்காரம் செய்துள்ளனர். கொண்டனர். நீண்ட நேரம் வரை சிறுமியை சித்திரவதை செய்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.


மாலையில், மூன்று பேரும், ராஜர்பாக் பகுதியில், பாதிக்கப்பட்டவரை காரில் இருந்து வெளியே வீசிவிட்டு, வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர் என்று தெரியவந்துள்ளது/ பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறினார்.


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது? ரயில்வே தகவல்


காவல்நிலையத்தில் புகார்


இதையடுத்து ஆர் கே பூர் மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை குறிப்பிட்ட எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சிறுமியும் முக்கிய குற்றவாளியும் கடந்த 6 மாதங்களாக ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்ததாகவும், அந்த நபர் தனது அடையாளத்தை அவளிடம் மறைத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.


பிரதான குற்றவாளியை, அவரது வீட்டில் இருந்து கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் கைது செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.  


மகளிர் ஆணையம் வேண்டுகோள்


இந்த சம்பவத்திற்கு திரிபுரா மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்னாலி கோஸ்வாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மைனர் பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களில் ஒரு பிரிவினரிடம் சிக்குவதை அவதானித்து வருகிறோம். சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ