சென்னை ஐ.ஐ.டி.யில் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.எச்.டி. படித்து வந்தார். தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்
இதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் ஜி. எடமன பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நிர்வாகத்திடம் அளித்த புகாரில் தங்கள் இருவரின் பெயர்கள் சேர்க்கப்படாத நிலையில், முதல் தகவல் அறிக்கையில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது முன்ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, சென்னை ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான கிங்சோ தேப்வர்மனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவருக்கு 2021 டிசம்பர் மாதம் வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மனு குறித்து கிங்சோ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR