மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான விகாஸ் அகாடி அரசாங்கம் இன்று (சனிக்கிழமையன்று) 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு பெரும்பான்மை சோதனையில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான பாஜக ஆளும் கட்சி விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி சபையிலிருந்து வெளியேறினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவசேனா (Shiv Sena), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) மற்றும் காங்கிரஸின் (Congress) கூட்டணியில் மொத்தம் 154 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க 145 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில் பெரும்பான்மை சோதனையில் வெற்றி பெற்றது. மேலும் மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS), அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI (M)) உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வரவில்லை.


சத்தியப்பிரமாணத்தின் போது அரசியலமைப்பிற்கு முரணான நடைமுறை மேற்கொண்டதாகக் கூறி, சட்டமன்றத்துக்குள் நுழைந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முழக்கங்களால், மகாராஷ்டிரா சட்டசபை அமர்வு தொடங்க தாமதமானது.


பெரும்பான்மை நிருபிக்கும் சோதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் திலீப் வால்ஸ் பாட்டீல் அவர்களால் நடத்தப்பட்டது, அவர் வார இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு அமர்வுக்கு புரோட்டெம் பேச்சாளராக (தற்காலிக அவைத் தலைவர் - Protem Speaker) நியமிக்கப்பட்டுள்ளார்.


பாஜகவின் வெளிநடப்பைத் தொடர்ந்து, 172 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினர். சட்டசபையில் உறுப்பினர்களாக இல்லாத முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.


நம்பிக்கை தீர்மானத்தை பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் என காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியிருந்தார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது.


எம்.வி.ஏ (MVA) கூட்டணியை சேர்ந்த சிவசேனா (Shiv Sena), என்.சி.பி (NCP), மற்றும் காங்கிரஸ் (Congress) என மூன்று கட்சிகளும், சனிக்கிழமை அந்தந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அறிக்கையை விடுத்திருந்தன. அதாவது அனைவரும் ஆஜராகி நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.வி.ஏ-வுக்கு (Maharashtra Vikas Aghad) ஆதரவாக வாக்களித்தனர். அதே நேரத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர் சனிக்கிழமை காலை மாடி சோதனை மூலம் பயணம்.


சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தற்காலிக அவைத் தலைவர் திலீப் வால்ஸ் பாட்டீல் மூலம் நடத்தப்பட்டது. அது பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும், அதுக்குரித்து கூறிய வால்ஸ் பாட்டீல், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகளின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது, எனவே திறந்த முறையில் வாக்கு மூலம் செய்யப்பட்டது" எனக் கூறினார். 


இன்று காலை பாஜகவின் மகாராஷ்டிரா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், இரகசிய வாக்கெடுப்புடன் சபாநாயகரை நியமித்த பின்னர் நம்பிக்கை தீர்மானம் நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்திருந்தார். மேலும் பேசிய அவர், “ஒரு சபாநாயகரை இரகசிய வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாரம்பரியம் மற்றும் நிர்ணய விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் ஒரு புரோட்டெம் பேச்சாளரின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகிறது எனக் கூறினார்.


சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.


முன்னால் முதலமைச்சர் ஃபட்னாவிஸ் கூறுகையில், “ஒரு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, நம்பிக்கை தீர்மானம் நடத்த முடியாது. என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை மறைத்து, சனிக்கிழமை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்தன. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அரசியலமைப்பை மீறுவதாகும். அரசியலமைப்பு பின்பற்றப்படும் வரை நாங்கள் சட்டசபையில் அமர மாட்டோம் எனக் கூறியுள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.