மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) வசிக்கும் மாதோஷ்ரீக்கு (Matoshree) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் அச்சுறுத்தும் அழைப்பு வந்ததிலிருந்து மாதோஷ்ரியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாக்ரேயின் இல்லத்தை வெடிக்கச் செய்யப் போவதாக வந்துள்ள இந்த அச்சுறுத்தல் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் (Dawood Ibrahim) பெயரில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மும்பை குற்றப்பிரிவு விசாரணையைத் தொடக்கியுள்ளது.


சனிக்கிழமை இரவு, உத்தவ் தாக்ரேவின் இல்லமான மாதோஷ்ரீயின் லேண்ட்லைன் எண்ணில் மூன்று முதல் நான்கு முறை அழைப்பு வந்தது. தொலைபேசி துபாயில் உள்ள ஒரு எண்ணிலிருந்து வந்தது. குறைந்தபட்சம் நான்கு முறை லேண்ட் லைனில் தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. தொலைபேசியில் பேசிய நபர் மாதோஷ்ரியில் குண்டு வீசப்போவதாக அச்சுறுத்தினார்.


ALSO READ: நரேந்திர மோடியைக் கொல்லுங்கள் - பிரதமரை மிரட்டிய இ-மெயில் கண்டுபிடித்த NIA


சமீப காலங்களில் அரசியல் முக்கியஸ்தர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட சமூகத்தின் முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இவற்றில் பல போலியானவையாக இருந்தாலும், இவற்றில் எந்த அச்சுறுத்தலையும் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் தொலைபேசி மூலம்   இப்படிப்பட்ட மிரடல்கள் வந்துள்ளன.