இந்தியாவில் இருந்த தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. லண்டனில் உள்ள ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸில், நீதிபதி ஜெர்மி ஸ்டூவர்ட்-ஸ்மித் மற்றும் நீதிபதி ராபர்ட் ஜே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய மேல்முறையீட்டாளரின் (நிரவ் மோடி) விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம், 51 வயதான வைர வியாபாரி தனது மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. 2 பில்லியன் டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் அளவுக்கு நீரவ் மோடியின் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் மனநல நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் கருதவில்லை என்று கூறியது. இந்தியாவுக்கு நாடு கடத்துவது அநீதியான மற்றும் அடக்குமுறை நடவடிக்கை  என்று தான் கருதவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.


மேலும் படிக்க | வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு விரைவில் அமல்: மத்திய அமைச்சர் கட்கரி


பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடி 2018ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். தன்னை நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்ள கூடும் என வாதிட்டுள்ளார். நிரவ் மோடி தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு பிரிட்டனில் சட்டப்பூர்வமாக நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.


மோசடி, பணமோசடி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் சாட்சிகளை மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். நீரவ் மோடியின் தாய்வழி மாமா மெஹுல் சோக்சியும் PNB வங்கியில் கடன்  மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய ஏஜென்சிகளால் தேடப்பட்டு வருகிறார். அவர் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.


மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 


முன்னதாக, நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நிராகரித்தது. லார்ட் ஜஸ்டிஸ் ஜெர்மி ஸ்டூவர்ட்-ஸ்மித் மற்றும் நீதிபதி ராபர்ட் ஜே ஆகியோர் தப்பியோடிய தொழிலதிபரை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து தீர்ப்பு வழங்கினர். இரு நீதிபதிகளும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தனர்.


அவரை நாடு கடத்துவதை எதிர்த்து நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார். திரு மோடியின் மனநிலை சரியில்லை, அவர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற வாதத்தில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.


மேலும் படிக்க | சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு -உள்துறை அமைச்சர் அமித் ஷா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ