PNB Case: லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் நிரவ் மோடியை நாடு கடத்துவதில் சிக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி வழக்கில், தப்பியோடிய நிரவ் மோடி, லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2021, 05:47 PM IST
PNB Case: லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் நிரவ் மோடியை நாடு கடத்துவதில் சிக்கல் title=

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, வெளிநாடு தப்பி சென்ற,  வைர வியாபாரியான நிரவ் மோடிக்கு (Nirav Modi) எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் சிபிஐ  வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) , ₹5000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி உள்ளது.

தப்பியோடிய நிரவ் மோடி, லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவரை விசாரணைக்காக இந்தியாவிற்கு அழைத்து வர இந்தியா தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக, நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என நிரவ் மோடிக்கு (Nirav Modi) லண்டன் உயர்ந்தீமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ | நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அவரை கைது செய்ய தயார் படுத்தப்பட்டிருக்கும் ஆர்தர் ரோடி சிறைசாலையில், கொரோனா தொற்று பரவல் அச்சம் உள்ளது என்றும், நிரவ் மோடி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால், உளவிய நீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளதாகவும் வாதிட்டார்.

இவரது வாதத்தை ஏற்று, மனநல மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு இங்கிலாந்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை அனுமதி அளித்தார். 

ALSO READ | PNB வழக்கு: நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது

முன்னதாக, சென்ற பிப்ரவரி மாதம், நிரவ் மோடியை நாடு கடத்தலாம் என லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்தியாவில் நீதி விசாரணை அமைப்புகள் சுதந்திரமானது, எனவே நிரவ் மோடி விசாரணைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டால், அவருக்கு பாதுகாப்பு இருக்காது என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்.

ALSO READ | ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News