நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு  சென்ற ஏப்ரல் 26ம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட வந்த சோட்டா ராஜன், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, 1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் சமூக விரீத செயல்களை, ரிமீட் கண்ட்ரோல் மூலம் நடத்தி வந்தார். 


மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர்  தான் சோட்டா ராஜன். பல நாட்களாக தப்பி வந்த சோட்டா ராஜன் 2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 


பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சோட்டா ராஜனுக்கு கோவிட் -19  (COVID-19) தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், வழக்கு விசாரணைக்காக வீடியோ கான்பரென்சிங் மூலம் ராஜனை ஆஜர்படுத்த முடியாது என்று திஹாரில் உள்ள உதவி ஜெயிலர் அமர்வு நீதிமன்றத்திற்கு  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ALSO READ | சட்ட விரோதமாக 524 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பதுக்கல்: தில்லி போலீஸ் 


இறந்தவர் நீரிழிவு, இதய பிரச்சினை, சிறுநீரக செயலிழப்பு, குடலிறக்கம்  மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ்  தொற்றும் ஏற்பட்டதால், இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


கொரோனா தொற்றால் (Corona Virus) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,915 பேர் இறந்தனர் என பதிப்வாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 7, 2021) தெரிவித்துள்ளது.


ALSO READ |  தடுப்பூசி போடும் பணிக்கு இடையூறாகும் வகையில் லாக்டவுன் இருக்கக் கூடாது: PM Modi


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR