டெஸ்லா கார் நிறுவனம்: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெஸ்லா (Tesla) குறித்து பெரிய அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இருந்து 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறக்குமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்


உண்மையில், புதன்கிழமை வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) வருடாந்திர மாநாடு நடைபெற்றதி. அப்போது, ​​மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Union Commerce Minister Piyush Goyal) கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து டெஸ்லா இறக்குமதி செய்த 1 பில்லியன் டாலர் வாகன உதிரிபாகங்களுடன் ஒப்பிடுகையில், வரும் நாட்களில் இறக்குமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.


மின்சார உதிரிபாகங்கள் வாங்க திட்டம்


கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள உதிரிபாகங்களை வாங்கியதாக மத்திய அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார். இப்போது நிறுவனம் 1.7 முதல் 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதிரிபாகங்களை வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். மின்சார வாகனங்கள் எதிர்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என்று தான் நம்புவதாக அமைச்சர் மேலும் கூறினார், "நாம் இந்த நிறுவனங்களை ஈர்க்க முயற்சிக்க வேண்டும்" என்றார். வருங்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். இது அந்தத் துறை வளா்ச்சியடைய உதவும். அந்தத் துறை உலகம் முழுவதும் வளரும்போது இந்தியாவிலும் வளா்ச்சி காணும் என்றாா் அவா்.


மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள்


புதிய EV பாலிசிக்கான பணிகள் 


ஆட்டோ பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளில் டெஸ்லா செயல்படுவதாக முன்னர் தகவல் வெளியானது. இது தவிர, வெளிநாட்டு EV உற்பத்தியாளர்களை இந்தியாவில் ஈர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதற்காக எலட்ரிக் வாகங்களுக்கான புதிய EV கொள்கையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


டெஸ்லா காரின் நான்கு வகை மாடல்கள்


டெஸ்லா ஒரு புதிய ஆலை மற்றும் உதிரிபாகங்களில் முதலீடு செய்து இந்தியாவிற்குள் நுழைகிறது. கார் பிரியர்கள் நீண்ட நாட்களாக டெஸ்லா கார்களுக்காக காத்திருக்கின்றனர். 3 டெஸ்லா மாடல்கள் ரூ. 70 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரையிலான விலையில் வருகிறது . இது நான்கு வெவ்வேறு 54 kWh, 62 kWh, 75 kWh மற்றும் 82 kWh பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது.


டெஸ்லா காரில் உள்ள அம்சங்கள்


ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், டெஸ்லா 3 கார்களூம் பல்வேறு வகைகளில் 354 கிமீ முதல் 523 கிமீ வரை முழு வீச்சில் செல்லும். டெஸ்லா மாடல் 3 ஸ்வெப்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், ஏ-பில்லர் பொருத்தப்பட்ட ORVMகள் மற்றும் ரியர் பம்பர் மவுண்டட் ரிஃப்லெக்டர் (Rear Bumper Mounted Reflector) ஆகியவற்றை கொண்டிருக்கும்.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ