புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் நாட்டில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டியதாயிற்று. வரலாற்றில் முதல்முறையாக ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து முற்றிலுமாக மூடப்பட்டது. அனைத்து நிர்வாகம், கோயில்-மசூதிகள், சுற்றுலா இடங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் வேலை தொடர்பான தொழில்களில் பயணிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் மீது இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் எங்கிருந்தாலும், அவர்கள் வீட்டிலிருந்து பல மைல் தொலைவில் சிக்கிக்கொண்டார். இருப்பினும், சுமார் ஒரு மாதங்களுக்கு பிறகு மத்திய அரசின் ஊரடங்கு முடிவிலிருந்து அவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கப் போகிறது. 


ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோரின் சிக்கல்களை தீர்க்கும் வகையில், அவர்கள் அனைவரும் சொந்த கிராமத்திற்கு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பையின் பாந்த்ராவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டத்தின் நினைவுகளும் உங்கள் மனதில் இருக்கும். லாக் டவுன் -1 இன் கடைசி நாளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பாந்த்ரா நிலையம் அருகே கூடினர். ஏப்ரல் 14 முதல் ரயில்கள் இயக்கத் தொடங்கும் என்றும், அதன் பிறகு அவர்கள் வீடுகளுக்குச் செல்லலாம் என்றும் செய்திகள் [வதந்தி] வெளியானதால் அவர்கள் அங்கு கூட்டமாக கூடினார்கள். 


மும்பை காவல்துறை அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் பின்னர், காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி துரத்த வேண்டியிருந்தது.


கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலரை பயமுறுத்தியது, குறிப்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்களுக்கு பெரும் அச்சைத்தை ஏற்படுத்தியது. உணவு, வேலை இல்லாத நிலை, தினமும் சம்பாதிக்கவும் சாப்பிடவும் வழியில்லை. இங்கிருந்து உயிரை விடுவதை விட தினது வீட்டுக்கு செல்லலாம் என்று பலர் முடிவு செய்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில்கள், சாலைகள் மூடப்பட்டதால், அவர்கள் கிராமத்திற்கு கால்நடையாக செல்வதைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. 


மார்ச் 24 அன்று, ஊரடங்கு போடப்பட்டு ஒருசில நாள் கழித்து, சமூக ஊடகங்களில் பல வீடியோ வைரலாகியது. அதில் சாலையோரத்தில் லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் நடைப்பயணமாக செல்வது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆண்கள், பெண்கள், குழந்தை, பெரியவர்கள் உட்பட பலர், அவர்களின் சொந்த மாநிலத்திற்கு நடைபயணமாக சென்றார்கள். இத சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 


ஒருசில கிலோமீட்டர் அல்ல, 100, 200, 500 கிலோமீட்டர் முதல் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை நடைபயணமாக சென்றார்கள். அதில் பலர் செல்லும் வழியில் மரணமடைந்தார்கள். அதுக்குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் அரசு தரப்பில் வெளியிடப்பட வில்லை. 


ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-க்கு பிறகு நீக்கப்படும், தங்களுக்கு விடிவுகாலம் வரும் என எதிர்பார்த்திருந்த ஏழை தொழிலாளர்களுக்கு, பெரும் இடியாக, மீண்டும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.


நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்து கேள்வி எழுப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசுடன் தொழிலாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. 


இறுதியாக சுமார் ஒரு மாதம் கழித்து, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


தற்போது அவர்கள் நடைபயணமாக செல்ல வேண்டி இருக்காது. அரசே அவர்களை, சொந்த கிராமத்திற்கு அழைத்து செல்லும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.