விழா மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
விழா மேடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
விழா மேடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில், வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், நிதின் கட்கரி பங்கேற்றார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது எழுந்த நின்ற நிதின் கட்கரி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார். இதனால் விழா மேடையில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்... "விழாவில் கலந்து கொண்டபோது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. இதனால் மயக்கம் ஏற்பட்டது. தற்போது நான் நலமுடன் உள்ளேன். எனது உடல்நலம் குறித்து விசாரித்த நலம் விரும்பிகளுக்கு நன்றி’" என குறிப்பிட்டுள்ளார்!