கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டும் என உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை ஆலைகள் தங்களுக்கு சேரவேண்டிய நிலுவை தொகையை செலுத்தாததால் வங்கி கடனை திரும்பி செலுத்த முடியவில்லை என்று முறையிட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை செலுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அடுத்து, சர்க்கரை ஆலைகள் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். மீறினால் சர்க்கரை ஆலைகளின் கிடங்கில் இருக்கும் சர்க்கரையை விற்று விவசாயிகளுக்கான நிலுவை தொகையை அரசு செலுத்தும் என்று மாநில கரும்பு மேம்பாட்டு மற்றும் கரும்பு ஆலைகள் துறை அமைச்சர் சுரேஷ் ராணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஷாம்லி நகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அமைச்சர் சுரேஷ் ராணா இதை அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு முழு நிலுவை தொகையும் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.


இதனிடையே, கரும்புக்கான நிலுவை தொகை கிடைக்க வேண்டும், மின்சார கட்டணம் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.