UPSC Success Story: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். பலருக்கும் ஐபிஎஸ் ஆக வேண்டும், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தெரியும். ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வாக யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதும் தெரியும். ஆனால், அந்த தேர்வுகள் எவ்வளவு கடினமாக இருக்கும், தேர்வுகள் எப்படி நடக்கும், எத்தனை தேர்வுகள் உள்ளன போன்ற தகவல்களை பெரும்பாலானோருக்கு தெரியாது எனலாம். அது கடினம் என்று மட்டுமே அவர்களுக்கு தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊக்கமளித்த 12th Fail


ஆனால், சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் '12th Fail' மனோஜ் குமார் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரியின் வாழ்க்கை பயணத்தையும், ஊக்கமளிக்கும் செயல்களையும் மட்டுமின்றி யுபிஎஸ்சி தேர்வு எந்தளவிற்கு கடினம் என்பதை கோடிக்கணக்கானோருக்கு புரியவைத்திருக்கிறது என சொல்லலாம். '12th Fail' திரைப்படம் திரையரங்கில் வெளியான போதே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், ஹாட்ஸ்டார் ஓடிடியில் பல்வேறு பிராந்திய மொழிகளில் வெளியாகி பரந்துபட்ட அளவில் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் யுபிஎஸ்சி நோக்கி செல்வோரின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரித்தாலும் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை. 


அந்த வகையில் தற்போது '12th Fail' திரைப்படம் மனோஜ் குமார் சர்மாவை போன்று தற்போது மற்றொரு ஊக்கமளிக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் கதையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்ச்சித் சந்தக் நாக்பூரை சேர்ந்த சிறுவன், அவன் எப்போதும் பெரிய இலக்குகளை அடைய விரும்பினான். நாக்பூர் சங்கர் நகரில் வசிப்பவர் அர்ச்சித் சந்தக். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அர்ச்சித் சந்தக் ஐஐடிக்கு படிக்கச் சென்றார். பி.டெக் படித்த அனைவருக்கும் அங்கு படிப்பது பெரும் கனவாக இருக்கும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதி.. இனி பயணிகளுக்கு 55% கட்டணச் சலுகை கிடைக்கும்


35 லட்ச ரூபாய் சம்பளம்


அர்ச்சித் சந்தக் டெல்லி ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் பட்டம் பெற்றார். 2012இல் ஜேஇஇ தேர்வில் சிட்டி டாப்பர் ஆக தேர்வானார். அவர் ஐஐடி கல்லூரியில் படிக்கும் போது, அரசு ஊழியராக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கினார், அர்ச்சித் சந்தக். தனது இன்டர்ன்ஷிப்பின் போது ஜப்பானிய நிறுவனத்தால் அவருக்கு ரூ.35 லட்சம் சம்பளப் பேக்கேஜையும் வழங்கியதாகவும் அதனை தான் மறுத்ததாகவும் கூறினார்.


184ஆவது ரேங்க


அதாவது, அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார். அர்ச்சித் சந்தக் தனது பட்டப்படிப்பை 2016இல் முடித்தார், அதன் பிறகு அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார். 2018ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொண்டு அகில இந்திய அளவில் தரவரிசையில் 184ஆவது இடத்தை பெற்றார். சந்தக் ஆரம்பத்தில் புசாவலின் பசார்பேத் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் நாக்பூரில் துணை காவல் ஆணையராக (டிசிபி) நியமிக்கப்பட்டார்.


அர்ச்சித் சந்தக் செஸ் விளையாடுவதை அதிகம் விரும்புவார் என கூறப்படுகிறது. மேலும் அவரது FIDE மதிப்பீடு 1,820 ஆகும். அவர் உடற்தகுதியில் மிகுந்த ஆர்வத்துடன் 42 கிலோமீட்டர் மும்பை மாரத்தானையும் நிறைவு செய்துள்ளார். இது தவிர, அர்ச்சித் சந்தக் தனது யுபிஎஸ்சி பேட்ச்மேட் ஐஏஎஸ் சௌமியா சர்மாவையும் மணந்தார். அவர் ஜில்லா பரிஷத் நாக்பூரில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. எஃப்டிக்கு அதிக வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ