இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்தது. 


ஆனால், அமெரிக்கா பிடிவாதமாக, கொரோனா தடுப்பூசிக்கான (Corona Vaccine) மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட  தடையை நீக்க மறுத்துள்ளது.


இது குறித்து  பேசிய அமெரிக்க (America) வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா தான். இங்கே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதனால் உள்நாட்டின் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.


ALSO READ | சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்: ஆக்ஸிஜன் தயாரிப்பாளர்களிடம் பிரதமர் மோடி

ஆனால், இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய பல எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'அமெரிக்க மக்களின் தேவைக்கு அதிகமாகவே கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவ மறுப்பது தவறு. அமெரிக்க அரசு பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, இந்தியாவிற்கு உதவ முன்வர வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அமெரிக்கா ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்த முடிவு செய்துள்ளது. அதன் பிறகே தடுப்பூசி மருந்தின் மூலப்பொருட்கள்  ஏற்றுமதி மீதான் தடையை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி,  கடந்த 24 மணி நேரத்தில், 3.32 லட்சம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த தொற்று பாதிப்புகள் எண்ணிக்கை 1,62,63,695 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது.


ALSO READ | காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR