காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2021, 08:38 AM IST
  • காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர் .
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன
காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள் title=

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 
இதனை தடுக்கும் வகையில், வரும் 25ம் தேதி பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வாகங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விளை நிலங்களில் ஞாயிற்றுக் கிழமை பறிக்கப்படும் காய்கறிகள், அன்று இரவே சென்னைக்கு வந்தால் தால், திங்கட்கிழமை அன்று காய்கறிகள் பொது மக்களுக்கு கிடைக்கும். எனவே,  காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர் . 

ALSO READ | தனிமைப்படுத்தப்பட்ட தமிழக கிராமம்: விடாது தீண்டும் கொரோனா தொற்று, உயரும் எண்ணிக்கை

காய்கறி தோட்டங்களில் ஞாயிறன்று காய்கறிகளைப் பறிக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும், காய்கறிகள் அத்தியாவசிய பொருள் என்பதோடு, விரைவில் அழுகும்பொருள் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை, காய்கறி லாரிகளுக்கும், காய்கறி பறிக்கும் பணிக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வேளாண் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி,  ஒட்டன்சத்திரம், பெரம்பலூர், மேட்டுப்பாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் வருகின்றன .

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று 78 பேர் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்து உள்ளது. 

ALSO READ | உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News