உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல்: ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று!
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 5 கட்ட வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 61 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் களத்தில் உள்ள 692 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குப்பதிவு ஐந்தாம் கட்டமாக இன்று (பிப்ரவரி 27, 2022) நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
அமேதி, ரேபரேலி, அயோத்தி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பாரபங்கி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி மற்றும் கோண்டா ஆகிய மாவட்டங்களில், இந்த கட்டத்தில் சுமார் 2.24 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்துகின்றனர்.
சமீபத்திய புதுப்பிப்பின்படி, முதல் இரண்டு மணி நேரத்தில் சராசரியாக 8.02% வாக்குகள் பதிவாகியுள்ளன, கௌசாம்பி மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மேலும் படிக்க | உலகில் கொந்தளிப்பான இன்றைய சூழலில் இந்தியா வலுவாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்கள் அலகாபாத் மேற்கில் இருந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள சிரத்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR