உலகில் கொந்தளிப்பான இன்றைய சூழலில் இந்தியா வலுவாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

ரஷ்யா உக்ரைன் பதற்ற நிலையை குறிக்கும் வகையில், தற்போது உலகில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தகைய சூழ்நிலையில் இந்தியா வலுவாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2022, 06:41 PM IST
உலகில் கொந்தளிப்பான இன்றைய சூழலில் இந்தியா வலுவாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி title=

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பஹ்ரைச் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். ரஷ்யா உக்ரைன் பதற்ற நிலையை குறிக்கும் வகையில், தற்போது உலகில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தகைய சூழ்நிலையில் இந்தியா வலுவாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியா வலுவாக இருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறினார்.

உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவை வலிமையாக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆன்மீக மண்ணில் மக்களின் ஒவ்வொரு வாக்கும் நாட்டை பலப்படுத்தும். பள்ளியில் கடுமை காட்டாத ஆசியர் இருப்பதை பெற்றோர் விரும்புவதில்லை. எல்லோரும் தவறூ செய்யும் மாணவர்களை திருத்தி வழிப்படுத்தும் உறுதியான மனநிலை கொண்ட ஆசிரியரை விரும்புகிறார்கள். அதே போன்று, காவல் துறையினரும் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய நாடு மற்றும் மாநிலத்தின் பொறுப்பும் வலுவான தோள்களில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா

கடினமான காலங்களில் கடினமான தலைவர் இருப்பதும் அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார். வளமான இந்தியாவுக்கு உத்திர பிரதேசத்தின் செழிப்பும், வளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. உ.பி.யில் பாஜக வெற்றியின் எல்லையை எட்டப் போகிறது என்றார். 2014க்குப் பிறகு, 2017, 2019 மற்றும் இப்போது 2022. உ.பி.யில் குடும்ப அரசியல் செய்பவர்களை வீழ்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்: பியூஷ் கோயல்

குடும்ப அரசியல் செய்தவர்களின் சுரண்டல்களை மக்கள் பார்த்திருப்பதாகவும், அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் பிரதமர் மோடி கூறினார். உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், தற்போது மக்கள் அச்சம் நீங்கி வாழ்கின்றனர் என்றார்.

மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News