பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மொபைல் போன் பயன்படுத்த உத்தரபிரதேச உயர் கல்வி இயக்குநரகம் தடை விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ராசு நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாஜக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது, கல்லூரி நேரங்களில் மாணவர்களின் கவனம் திசைதிருப்பப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மொபைல் போன் பயன்படுத்த உத்தரபிரதேச உயர் கல்வி இயக்குநரகம் தடை விதித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்கல்வி இயக்குநரகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் வளாகத்திற்குள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இனிமேல் வளாகத்திற்குள் மொபைல் போன்களைக் கொண்டு வரவோ பயன்படுத்தவோ முடியாது. 


முக்கியமாக, மொபைல் பயன்பாட்டிற்கான தடை அனைத்து உ.பி. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமின்றி கற்பித்தல் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக உயர்கல்வி இயக்குநரகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுவதை இயக்குநரகம் கவனித்தது. அமைச்சரவைக் கூட்டங்கள் உட்பட தனது உத்தியோகபூர்வ சந்திப்புகளின் போது மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சில சமயங்களில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் தங்கள் மொபைல் போன்களால் திசைதிருப்பப்படுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.