ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி செய்துள்ள சாதனை! முறையடிப்பது சிரமம் தான்!

ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். 

 

1 /7

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடிய எலிமினேட்டர் போட்டியில் கோலி ஒரு சிறப்பு மைல்கல்லைப் பெற்றார்.   

2 /7

ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலி, ஆரஞ்சு கேப்பை தன் வசம் வைத்துள்ளார். மேலும் தற்போது ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

3 /7

ஐபிஎல்லில் இந்த ஆண்டு இரண்டாவது சிறந்த சீசனை கோலி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 700 ரன்களுக்கு மேல் இந்த ஆண்டு அடித்துள்ளார். 8000 ரன்களை ஆர்சிபிக்காக 244வது இன்னிங்ஸில் அடித்துள்ளார்.  

4 /7

விராட் கோலி ஐபிஎல்லில் இதுவரை 8 சதங்கள் மற்றும் 35 அரை சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்த படியாக ஷிகர் தவான் உள்ளார்.   

5 /7

இந்த சீசனில் 700 ரன்களை அடித்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. கெய்ல் 2012 மற்றும் 2013ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக 2 முறை 700 ரன்களை அடித்து இருந்தார்.   

6 /7

விராட் கோலி தற்போது 2016 மற்றும் ஐபிஎல் 2024ல் இதே சாதனையை செய்துள்ளார். இந்த போட்டியில் 33 ரன்கள் எடுத்து இருந்த போது கோலி ஆட்டமிழந்தார்.   

7 /7

ஆர்சிபி அணிக்காக இந்த ஆண்டு கோலி 15 ஆட்டங்களில் 154.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 741 ரன்கள் அடித்துள்ளார்.  மேலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். கெய்க்வாட் 14 ஆட்டங்களில் 583 ரன்கள் எடுத்துள்ளார்.