காவடி யாத்திரை வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சிகளை விற்க தடை: யோகி ஆதித்யநாத்
காவல் நிலையங்கள், வட்டம், மாவட்டம், எல்லை, மண்டலம் மற்றும் பிரிவு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.
லக்னோ: ஜூலை 4-ம் தேதி தொடங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை வகித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போலீஸ் கமிஷனர்கள், டிவிஷனல் கமிஷனர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள், வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டு தற்போது தொடங்க உள்ள பண்டிகை காலத்தில் ஷ்ராவண சிவராத்திரி, நாகபஞ்சமி, ரக்ஷாபந்தன் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும். இதில் "பாரம்பரியமான காவடி யாத்திரை புனித மாதமான ஷ்ராவண மாதத்தில் ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் ஜூன் 29-ம் தேதி பக்ரி ஈத் கொண்டாடப்படும். இந்த நேரம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனவே, அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள் என கூறியுள்ளார் .
மேலும், " பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, காவடி வழித்தடத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் பாதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். வெயில் அதிகம் என்பதால், பானங்கள் வழங்கவும், குடி தண்ணீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்," என்று முதல்வர் கூறினார். யாத்திரை செல்லும் பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், அதிகாரிகளை ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார். கன்வார் முகாம் அமைக்கும் இடங்களை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், முன் கூட்டியே முடிவு செய்து அறிக்க வேண்டும்,'' முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
காவடி யாத்திரையின் போது பயன்படுத்தப்படும் டிஜே, இசை போன்றவற்றின் ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இருப்பதை உறுதிசெய்யவும் முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்." நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுங்கள். ஆனால் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும் "என்று அவர் கூறினார். மேலும், ஆன்மீக ஊர்வலங்களில் ஆயுதங்களைக் காட்சிப்படுத்தக் கூடாது என்றும் ஆதித்யநாத் அறிவுறுத்தினார். "சில விஷமிகள் தேவையில்லாமல் பிற சமூகத்தினரைத் தூண்டிவிட முயற்சி செய்யலாம், இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்கவும். பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும். காவல்துறை தினமும் மாலையில் கட்டாயம் ரோந்து செல்லுங்கள்.
மேலும், ரம்ஜான் சமயத்தில், மத நடவடிக்கைகளால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் பாராட்டு கிடைத்துள்ளது. இம்முறை பக்ரி ஈத் மற்றும் முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு இதே முறையை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக அந்தந்த மத தலைவர்கள்/ ஆன்மீக தலைவர்களுடன் உள்ளாட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ," என்று அவர் கூறினார்.
பக்ரி ஈத் அன்று பலியிடுவதற்கான இடத்தை முன்கூட்டியே குறிக்க வேண்டும் என்று அவர் கூறினார். "முன்னர் குறிக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எங்கும் பலிகள் செய்யக்கூடாது. எப்படியிருந்தாலும், தடை செய்யப்பட்ட விலங்குகள் எங்கும் பலியிடப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பலி கொடுத்த பின் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான செயல் திட்டம் இருக்க வேண்டும்," என்றார்.
கடந்த ஆண்டு ஷ்ராவணத்தின் போது, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுமார் ஒரு கோடி சிவன் பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் புனித மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் கோயிலுக்கு வருகை தந்தனர். இந்த ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து மாநிலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார் ஆதித்யநாத். வாரணாசியுடன், அயோத்தி மற்றும் சீதாபூர் உள்ளாட்சி நிர்வாகமும் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து திட்டமிட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமிங்/சாட்டிங் ஆப்ஸ் மூலம் குழந்தைகளை மதமாற்றம் செய்வது குறித்தும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்."சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பதின்ம வயதினரை மதமாற்றம் செய்த சம்பவம் நமக்கு தெரிந்ததே. காஜியாபாத்தில் உள்ள ஆன்லைன் கேமிங்/சாட்டிங் ஆப்ஸ் மூலம் குழந்தைகள் குறி வைக்கப்படுகின்றனர். இது போன்ற சமூக விரோத மற்றும் தேச விரோத சம்பவங்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்," என்று ஆதித்யநாத் கூறினார்.
சட்டவிரோத மத மாற்ற நடவடிக்கையை சர்வதேச அமைப்புகள் செய்து வருவதாக அவர் மேலும் கூறினார். "ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து இந்த அமைப்புகள் இயங்கி வருகிறது. பண தருவதாக ஆசைகளும் காட்டப்படுகின்றன. சட்டவிரோத மத மாற்றத்தின் இந்த ஒட்டுமொத்த சர்வதேச அமைப்பின் சதி முறியடிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க - 6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா... அவரை நம்ப முடியுமா - நிர்மலா சீதாராமன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ