Uttar Pradesh Lok Sabha Election Result 2024: உத்தர பிரதேசத்தில் எக்சிட் போலை ஏமாற்றிய இந்தியா கூட்டணி!!
Uttar Pradesh Election Result 2024: உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு இந்திய கூட்டணி தற்போது 44 இடங்களிலும், பாஜக தலைமையிலான என்டிஏ 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் சமீபத்திய ட்ரெண்டுகள் தெரிவிக்கின்றன.
Uttar Pradesh Lok Sabha Election Result 2024: தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்டம் இன்று!! 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று தெரிந்துவிடும். அரசியல்வாதிகள், பொது மக்கள் என அனைவரும் இந்த முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவு இம்முறை தேர்தல் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளது.
எக்சிட் போலை ஏமாற்றிய இந்தியா கூட்டணி
உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு இந்தியா கூட்டணி தற்போது 44 இடங்களிலும், பாஜக தலைமையிலான என்டிஏ 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் சமீபத்திய ட்ரெண்டுகள் தெரிவிக்கின்றன. ஆசாத் சமாஜ் கட்சியும் (கன்ஷிராம்) ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள முக்கிய மக்களவைத் தொகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் முறையே வாரணாசி, லக்னோ, ரேபரேலி மற்றும் கண்ணவுஜ் மக்களவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் அனுப்ரியா படேல் (அப்னா தளம் (எஸ்)), பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி ஆகியோர் முறையே அமேதி, மிர்சாபூர் மற்றும் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் NDA 62 இடங்களையும், அப்போதைய கூட்டணிக் கட்சிகளான பிஎஸ்பி மற்றும் சமாஜ்வாதி கட்சியும் முறையே 10 மற்றும் 5 இடங்களை வென்றன.
மதுராவில் ஹேமா மாலினி முன்னிலை
பாஜக வேட்பாளர் ஹேமமாலினி தர்மேந்திர தியோல் 110234 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கர் 37430 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஸ்மிருதி இரானி பின்னடைவு
மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் பின்தங்கியுள்ளார். ஸ்மிருதி இரானிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் கே.எல். ஷர்மாவை விட அவர் 13,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
41 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னணி
உத்தர பிரதேசத்தில் பாஜக சற்றும் எதிர்பாராத விதமாக 41 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இப்போது சிறிய சரிவைக் கண்டுள்ளது. எனினும் எக்சிட் போல் முடிவுகளைதான் இன்றைய முடிவுகளும் பிரதிபலிக்கும் என பாஜக உறுதியாக உள்ளது.
பிரதமர் மோடி முன்னிலை
பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக துவக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரசின் அஜய் ராயை விட 6,233 வாக்குகள் பின்தங்கி இருந்த நிலையில், தற்போது அவர் வாக்கு வித்தியாசத்தை ஈடு செய்து முன்னிலையில் உள்ளார்.
அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலம் உத்தர பிரதேசம்
இந்தியாவின் மிக முக்கியமான, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் நிலவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். உத்தர பிரதேசம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாக இருந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை ஒன்பது பிரதமர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மாநிலம் உத்தர பிரதேசம். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்ததற்கு உபி ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அந்த இரண்டு முறையும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2024 தேர்தலில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் உள்ளார். எதிர்க்கட்சிகள், முக்கியமாக சமாஜ்வாதி கட்சி-காங்கிரஸ் கூட்டமைப்பான இந்தியா கூட்டணியும் உத்தரப் பிரதேசம் வழியாக புது தில்லிக்கு சென்று பா.ஜ.க.வின் வெற்றிப்பயணத்தை முடக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
"டபுள் எஞ்சின்" அரசாங்கம் (மத்தியத்தில் மோடி ஆட்சி மற்றும் உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசாங்கம்) என்று அழைக்கபப்டும் உபி அரசுக்கு, மக்களின் முன் பிரச்சாரம் செய்யும்போது எடுத்துச்சொல்ல சாதனைகளின் நீண்ட பட்டியலே இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணியோ சிறுபான்மை வாக்குகளை சேக்கரிப்பதிலேயே கவனம் செலுத்தியது.
2014, 2019 தேர்தல்களின் நிலவரம்
2014 தேர்தலில் 80 மக்களவைத் தொகுதிகளில் 71 இடங்களை பாஜக வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில், பாஜக 80 மக்களவைத் தொகுதிகளில் 62 இடங்களைப் பெற்றது.
உத்தர பிரதேசத்தில் 2014 இல் 42.63% ஆக இருந்த பாஜக -வின் வாக்குப் பங்கு 2019 இல் 49.98% ஆக உயர்ந்தாலும், அதன் தொகுதிகளின் எண்ணிக்கை 71ல் இருந்து 62 ஆகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், 2019 -இல் BSP மற்றும் SP கட்சிகள் கூட்டணி அமைத்து முறையே 10 மற்றும் 5 தொகுதிகளை வென்றதுதான். 2014 இல் இரண்டு இடங்களை வென்ற காங்கிரஸ், 2019 இல் ரேபரேலியில் மட்டுமே வென்றது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எஸ்பி மற்றும் பிஎஸ்பி பிரிந்தன. எனினும், 2024 லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் இணைந்தன.
சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி உத்தர பிரதேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்று தெரியும். இந்தியா கூட்டணி பலம் பெரிதா அல்லது இன்னும் டபுள் எஞ்சின் ஆட்சியைத் தான் மக்கள் விரும்புகிறார்களா என்பதன் விடை விரைவில் தெரியும்.
மேலும் படிக்க | Kanniyakumari TN Election Result 2024: கன்னியாகுமரி தொகுதியில் வாகை சூடப் போவது...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ