லக்கிம்பூர்: உ.பி.யின் லக்கிம்பூர் கேரி (Lakhimpur Kheri) பகுதியில் குற்றம் உச்சத்தில் உள்ளது. 20 நாட்களில் சிறுபான்மையினரைக் கொன்ற மூன்றாவது சம்பவம் இங்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை சிம்ஹாய் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கரும்பு வயலில் 3 வயது சிறுமியின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி புதன்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போனார் மற்றும் அவரது உடல் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது, அவரது உடலில் காயங்களும் இருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய பகை காரணமாக கிராமத்தைச் சேர்ந்த லெக்ராம் என்பவன் மகளைக் கொன்றதாக சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை விரோதப் போக்கு காரணமாக முதலில் கடத்திச் சென்று பின்னர் கொலை செய்ததாக போலீசாருக்கு அளித்த புகாரில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, லக்கிம்பூர் கெரியில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் யோகி அரசாங்கத்தைத் தாக்கியுள்ளது.


ALSO READ |  கணவரின் குடும்பம் உட்பட 139 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார்!


லக்கிம்பூர் கேரியில் பீதி:
20 நாட்களில் நடந்த மூன்றாவது கொலை சம்பவத்திலிருந்து லக்கிம்பூர் கெரியில் பீதி நிலவுகிறது. மூன்று சம்பவங்களிலும், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே மாதிரியான குற்றத்தைச் செய்துள்ளார்கள். முதலில் சிறுமிகள் வீட்டிலிருந்து காணாமல் போயினர். மறுநாள் அவர்களின் சடலம் கரும்பு வயல் அல்லது வீட்டிற்கு வெளியே இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.


யோகி அரசாங்கத்தை தாக்கிய காங்கிரஸ் :
உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, 'லக்கிம்பூர் கெரியில் சிறுமிகளுடன் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. நேற்று மற்றொரு பெண் கொல்லப்பட்டார், ஒரு பெண் கவுசாம்பியில் கற்பழித்து கொல்லப்பட்டார். இப்படி பல சம்பவங்களுக்குப் பிறகும், முதல்வர் யோகிநாத் (Yogi Adityanath) எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் எனக் குற்றம்சாட்டி உள்ளார். 


 



13 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு கொலை:
முன்னதாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மாவட்டத்தில் இசனகரில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமி தனது வீட்டிலிருந்து மதியம் பண்ணைக்குச் சென்றிருந்ததாகவும், மாலை வரை திரும்பாதபோது, ​​உறவினர்கள் அவளைத் தேடத் தொடங்கியதும், அவரது உடல் கரும்பு வயலில் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்எஸ்ஏ கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.


ALSO READ |  கொடூரத்தின் உச்சக்கட்டம்: பசுமாட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்!!


17 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டாள்:
இதேபோன்ற சம்பவம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நீம்கான் (Neemgaon) பகுதியில் 17 வயது உதவித்தொகை படிவத்தை (scholarship application) நிரப்ப சென்ற தலித் சிறுமியின் சடலம் அவரது கிராமத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்படடு சிறுமியின் உடலை சிதத்துள்ளனர்.


இந்த இரண்டு சம்பவங்களும், இன்று நடைபெற்ற சம்பவம் கடந்த 20 நாட்களில் நடந்துள்ளது. இதன் பின்னர், எதிர்க்கட்சியான காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியும், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து யோகி அரசு மீது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.