கொல்கத்தா: ஒரு மனிதனின் தலைவிதி எப்படி? எப்போ? மாறும் என்று எதுவும் சொல்ல முடியாது என்று கூறப்படுவது வழக்கம். அதிர்ஷ்டம் காரணமாக, ஒரு நபர் தரையில் இருந்து உச்சிக்கும், உச்சியில் இருந்து வீழ்ச்சிக்கும் வந்து விடுகிறார்கள். கொல்கத்தாவிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது உள்ளது. இங்கே ஒரு காய்கறி விற்பனையாளரின் தலைவிதியை அதிர்ஷ்டம் என்று சொல்வதா? இல்லை என்னவென்று சொல்வது என்ற கூறமுடியவில்லை, ஆனால் அவரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆம் ஜூன் 2 ஆம் தேதி உணவுக்கே மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலையில் இருந்தவர், ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தா (Kolkata)  தம் தம் பகுதியில் பகுதியில் உள்ள ஒரு காய்கறி விற்பனையாளருக்கு (Vegetable seller) ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளது. அவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.


நமக்கு கிடைத்த தகவல்களின்படி, கொல்கத்தாவின் தம் தம் பகுதியில் பகுதியில் காய்கறி கடை நடத்தி வரும் சாதிக், டிசம்பர் 31 அன்று நாகாலாந்து லாட்டரியின் (Nagaland state lottery) புத்தாண்டு பரிசு 5 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.


குப்பையில் வீசப்பட்ட லாட்டரி டிக்கெட்: 


ஜனவரி 2 ஆம் தேதி லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அன்று லாட்டரி டிக்கெட் கடைக்குச் சென்று பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு பரிசு விழுவில்லை. காய்கறி விற்பனையாளர் சாதிக் அந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் டஸ்ட்பினில் (குப்பைப் பெட்டி) வீசியுள்ளார். 


லாட்டரி விற்பனையாளர் தகவல் கொடுத்தார்:


தனக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை என்று தனது சகாக்களிடம் சாதிக் கூறியுள்ளார். ஆனால் அடுத்த நாள் லாட்டரி விற்கும் கடைக்காரர் ஒரு டிக்கெட்டில் ஒரு கோடி ரூபாய் வெகுமதி கிடைத்திருப்பதாக, மீதமுள்ள நான்கு டிக்கெட்டுகளுக்கு 1-1 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது எனக் கூறியுள்ளார். 


லாட்டரி விற்பனையாளர் கூறியதை கேட்ட சாதிக்கின் காலடியில் தரையில் நழுவியது. ஏனெனில், அவர் அனைத்து டிக்கெட்டுகளையும் டஸ்ட்பினில் வீசினார். அவர் உடனடியாக வீட்டிற்குச் சென்றார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குப்பைப் பெட்டியில் டிக்கெட்டுகளைத் தேடத் தொடங்கினார். அதிக முயற்சிக்குப் பிறகு லாட்டரி டிக்கெட்டுகள் கிடைத்தன.


வாழ்க்கை மாறியது:


லாட்டரி பரிசுத் தொகையை பெற சாதிக் 1-2 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் சாதிக் மற்றும் அவரது மனைவி அமினா ஆகியோர் கிடைக்கும் பணத்தை கொண்டு என்ன  செய்யலாம் என ஒரு திட்டத்தை தயார் செய்துள்ளனர். சாதிக் ஒரு எஸ்யூவி காரை முன்பதிவு செய்துள்ளார். அமினா தனது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க விரும்புகிறார். நல்ல வீடு வாங்க விரும்புகிறார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது