ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் வசித்த ‘சைவ’ முதலை இறைவனடி சேர்ந்தது!
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேரதிசயமாக இருந்த முதலையாழ்வார் என அழைக்கப்பட்ட சைவ முதலை இன்று இறைன் திருவடி சேர்ந்தது.
நமது வாழ்நாளில் எத்தனையோ அதிசய கதைகளை, புராணங்கள், காப்பியங்கள் மூலமாகவும், செவிவழிக்கதைகள் மூலமாகவும் கேட்பதுண்டு. ஆனால் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேரதிசயமாக இருந்த முதலையாழ்வார் என அழைக்கப்பட்ட சைவ முதலை இன்று இறைன் திருவடி சேர்ந்தது. கேரளாவின் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பகவான் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்த 'சைவ முதலை' பபியா இன்று, அதாவது அக்டோபர் 10 அன்று காலமானது. கேரள மாநிலத்தின் காசர்கோடில் உள்ள அனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த பபியா என அழைப்பட்ட முதலை இறைவன் திருவடி சேர்ந்தது.
முதலையாழ்வார் என்றழைக்கப்பட்ட பபியா என்ற இந்த முதலை பகவானுக்கு நடக்கும் நித்ய பூஜையின் போது, குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து பகவானை தரிசித்து விட்டு பிரசாதம் பெற்று செல்வது மிகப்பெரும் அதிசயமாக பலராலும் பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா?
எழுபத்தைந்து வயதான இந்த சைவ முதலை பக்தர்களுக்கு எந்த வித இடையூறையும் இதுவரை ஏற்படுத்தியதில்லை என கூறப்படுகிறது. இந்த முதலை சுத்த சைவமாக இருந்தது தான் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தாம் வசித்து வரும் குளத்திலுள்ள மீன்களை கூட அந்த முதலை உண்டதில்லை என கூறப்படுகிறது. கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இதனை முதலையாழ்வார் என்றே பலர் அழைத்தார்கள்.
நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமான முதலைக்கு கோவில் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. பகவான் விஷ்ணுவின் கோயிலான ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலை பாபியா பாதுகாப்பார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். காசர்கோட்டில் உள்ள ஸ்ரீ ஆனந்தபத்மநாப சுவாமி கோவில் குளத்தில் வசித்த பாபியா, ஒரு நாளைக்கு இரண்டு முறை கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ