புரட்டாசி சனிக்கிழமை: விரதம் இருந்து வழிபட்டால் கேட்கும் வரத்தை கொடுப்பார் பெருமாள்

Purattasi Sani Viratham: புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாணுக்கு விரதமிருந்து வேண்டுதலை செலுத்தினால், நாம் வேண்டுவதை அவர் அளிக்காமல் இருக்க மாட்டார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2022, 11:11 AM IST
  • காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வேண்டினால், நாம் வேண்டுவதை அவர் அளித்து அருள் புரிவார்.
  • நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள்வார்.
  • புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமை: விரதம் இருந்து வழிபட்டால் கேட்கும் வரத்தை கொடுப்பார் பெருமாள்  title=

தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதங்களில் புரட்டாசி மாதத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த மாதம் குறிப்பாக பெருமாள் மற்றும் நவராத்திரி நாயகிகளாகிய துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் மாதமாக கருதப்படுகிறது. அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், அவரது உடனடி அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மாதத்தில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் நாம் வேண்டி கேட்பது அனைத்தும் கிடைக்கும்.

மகாவிஷ்ணுவுக்கு பிடித்தமான நாள் சனிக்கிழமை. ஆகையால், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அவருக்கு விரதமிருந்து வேண்டுதலை செலுத்தினால், நாம் வேண்டுவதை அவர் அளிக்காமல் இருக்க மாட்டார். அதோடு நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவார்.

நமக்கு வரும் துன்பங்களுக்கு முக்கிய காரணம் நமது கர்மாக்களே ஆகும். துன்பங்களுக்காக மற்றவரை குறை சொல்லாமல், அதற்கான தீர்வை மற்றவர்களிடம் தேடாமல், நாமே காரணம், நாமே தீர்வு என்ற சித்தாந்தத்தை கடைபிடித்தாலே, நமது வினாக்களுக்கான விடைகள் நமக்கு கிடைத்து விடும். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வேண்டினால், நாம் வேண்டுவதை அவர் அளித்து அருள் புரிவார். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள்வார். 

மேலும் படிக்க | தீபாவளி முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்: குபேரரும், சனியும் சேர்ந்து அருள் புரிவார்கள் 

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

இன்று புரட்டாசி சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்த நாளில் பொதுவாக பெருமாள் பக்தர்கள், நெற்றியில் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் பெருமாளுக்கு பிடித்தமான பிற நைவேத்யங்களை செய்து பெருமாளை வழிபடுவர். பல பக்தர்கள் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று பெருமாளின் நாமங்களை கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி ஆகியவற்றை தானமாகப் பெறுவதும் உண்டு. பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள். 

பெருமாளை குலதெய்வமாகக் கொண்டுள்ள சில குடும்பங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமையில் மாவிளக்கு ஏற்றி வணங்குவதும் வழக்கம். இடித்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய் ஆகியவற்றை கலந்து, அந்த மாவை அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவார்கள். 

புரட்டாசி சனிக்கிழமை விரத பலன்கள்:

- புரட்டாசி சனிக்கிழமை விரதம் பெருமாள் பக்தர்களுக்கான மிக முக்கிய விரதமாக பார்க்கப்படுகின்றது.

- புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும்.

- குழந்தைகள் படிப்பில் கவனமில்லாமல் இருந்தால், புரட்டாசி சனிக்கிழமை விரதம் மூலம் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

- புரட்டாசி சனிக்கிழமை விரதமிருப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

- குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் போன்ற ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.

- போதுமான பண வரவு இல்லாமல் பண கஷ்டத்தில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து நரசிம்ம பிரபத்தியை பாராயணம் செய்யலாம்.

- குறிப்பிடத்தக்க நன்மைகளை தவிர, புரட்டாசி சனிக்கிழமை விரதமிருப்பவர்கள், மனம் உருகி வேண்டும் அனைத்தையும் பெருமாள் தவறாமல் நடத்தி வைப்பார்.

மேலும் படிக்க | மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி தடையின்றி கிடைக்க செய்ய வேண்டியவை.!!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News