Video: பாரத் மாதா கீ ஜே... கேரள பெண்ணின் செயல் - டென்ஷன் ஆன மத்திய அமைச்சர்!
Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பாரத் மாதா கீ ஜே என கோஷமிடாத பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் சில வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், பாஜக மட்டுமின்றி வலதுசாரி இயக்கங்களை சேர்ந்த உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
பாரத் மாதா கீ ஜே...
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி லேகி உரையாற்றியனார். தொடர்ந்து அவர் உரையை முடிக்கும்போது, பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டார். அவரது கோஷத்திற்கு ஆதரவு தரும் வகையில், கூட்டத்தில் இருந்த பங்கேற்பாளர்களும் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர்.
இருப்பினும், போதிய அளவில் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து பலரும் கோஷமிடாமல், அப்படியே நிற்பதாக அவர் குற்றஞ்சாட்டி சத்தமாக சொல்லும்படி கூறினார். மீண்டும் அவர் பாரத் மாதா கீ ஜே என ஆக்ரோஷமாக கோஷமிட்டார்.
மேலும் படிக்க | மானிய விலையில் பாரத் அரிசி... கிலோ ₹29 மட்டுமே... அடுத்த வாரம் முதல் விற்பனை!
அப்போதும், பலரும் கோஷமிட மீனாட்சி லேகி, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்த பெண்ணை கைக்காட்டி பாரத் மாதா கீ ஜே என கோஷமிட கூறினார். 'எனக்கு மட்டும்தான் பாரதம் தாயா... உங்களுக்கு இல்லையா' என்று பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடினார்.
கடும் சர்ச்சை
மீண்டும் அமைச்சர் கோஷமிட பார்வையாளர்கள் தரப்பும் மீண்டும் கோஷமிட்டது. இருப்பினும், மீனாட்சி லேகி கோபமாகவே இருந்தார். அந்த பெண் இந்த முறையும் கோஷமிடவில்லை என மீனாட்சி லேகி மீகுந்த கோபத்துடன் பேசினார். மேலும், அந்த பெண் கைக்கட்டி அப்படியே நிற்பதாகவும் மீனாட்சி லேகி மேடையில் பேசினார். தொடர்ந்து, 'பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிட முடியவில்லை என்றால் இந்த இடத்தை விட்டு வெளியே செல்லுங்கள்' என அமைச்சர் பேசினார்.
மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் இடதுசாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவுக்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அமைச்சரின் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ