பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற CAA எதிர்ப்பு பேரணியின் போது சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டமைக்கு AIMIM தலைவர் வாரிஸ் பதான் மன்னிப்பு கோரியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது வார்த்தைகள் அரசியல் வழியில் பார்க்கப்படுகின்றன என்றும் பதான் கூறியுள்ளார். என்னையும் எனது கட்சியையும் இழிவுபடுத்தும் சதித்திட்டத்தின் கீழ் இது செய்யப்படுகிறது. எனது வார்த்தைகளால் யாராவது காயமடைந்திருந்தால், நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன் என்று குறிப்பிட்டு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.


உங்கள் தகவலுக்கு, வாரிஸ் பதான் சனிக்கிழமை தனது பாந்த்ரா இல்லத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இதன் போது, ​​அவர் தனது அறிக்கையை தெளிவுபடுத்தினார். 


முன்னதாக பிப்ரவரி 16-ஆம் தேதி வடக்கு கர்நாடகாவின் கலாபுராகியில் நடந்த குடியுரிமை எதிர்ப்பு திருத்தச் சட்டப் பேரணியில் உரையாற்றியபோது பதான் இந்த கருத்துக்களைக் கூறினார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 117, 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல்) மற்றும் 153A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வாரிஸ் பதான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மறுபுறம், AIMIM தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதானின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக மாநில காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சனிக்கிழமை தெரிவித்தார். மார்ச் 4-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ள இந்த வழக்கில் பீகார் நீதிமன்றத்தில் பதானுக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் தற்போது CAA எதிர்ப்பு பேரணியின் போது சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டமைக்கு AIMIM தலைவர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.