புது டெல்லி: சீனாவிலிருந்து பரவும் கொடிய கொரோனா வைரஸ் (Coronavirus) உலகம் முழுவதையும் பயத்தில் மூழ்கடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இந்தியாவில் 8 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து வந்த நபருடன் தொடர்பு கொண்ட ஆக்ராவின் 6 பேரிலும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உ.பி. சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். அவர்கள் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிகள் மூடப்பட்டது:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தில் ஒரு பள்ளி குழந்தையும் கலந்து கொண்டார். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பற்றிய தகவலை அறிந்ததும் அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவைத் தவிர்ப்பதற்காக மற்றொரு பள்ளியும் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பார்டியில் கலந்துக்கொண்ட அனைவரும் தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதுக்குறித்த அறிக்கை இன்னும் வரவில்லை.


ஆக்ராவிலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு:
அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் ஆக்ராவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்ததால், ஆக்ராவின் 6 பேரிலும் இந்த கொடிய வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உ.பி. அரசின் சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்தார். இது தவிர, இந்த 6 நபர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்களை அடையாளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


டெல்லியின் நோயாளியின் சீராக உள்ளது:
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட டெல்லியில் வசிப்பவர் பிப்ரவரி 25 அன்று இத்தாலியில் இருந்து இந்தியா திரும்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நபருக்கு கொரோனாவின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதாலும், அந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்களில் இத்தாலி இல்லை என்பதாலும், அவர் தீவிர சோதனைக்கு உட்படத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டபோது, ​​சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலுக்குப் பிறகு, அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுக்குறித்து பேசிய மருத்துவர் ஒருவர், “அந்த மனிதரின் நிலை சீராக உள்ளது. அவர் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றார்.


விமானக் குழு உறுப்பினர்களின் கண்காணிப்பு:
கொரொனோவால் பாதிக்கப்பட்ட டெல்லி நபர் வந்த விமானத்தில் இருந்த அனைத்து குழு உறுப்பினர்களும் 14 நாட்கள் தங்கள் வீட்டில் தனித்தனியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் கூறும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.