புதுடெல்லி: அதிக சப்தம் எழுப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்காக மெளனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை… மாசு ஏற்படுத்தும் அளவு ஒலி எழுப்பினால் தான் அபராதம் விதிக்கப்படும்…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மகிழ்ச்சியைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்காதா?  இதை மனதில் வைத்து, டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி (Delhi Pollution Control Committee (DPCC)) தேசிய தலைநகரில் ஒலி மாசுபாட்டை உருவாக்குவதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.  


இனிமேல் டெல்லியில், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.


Also Read | மம்தா பானர்ஜிக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்


டிபிசிசி (DPCC) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பட்டாசு வெடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் கட்டுப்பாட்டை மீறினால் 1,000 ரூபாய் அபராதம்; இதுவே அமைதியான மண்டலங்களில் 3,000 ரூபாயாக இருக்கும்.


"பேரணிகள், திருமணம் அல்லது மத விழாவில் விதிகள் மீறப்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இது, குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் 10,000 ரூபாய், அமைதியான மண்டலங்களில் 20,000 ரூபாயாக இருக்கும்" என்று டிபிசிசி கூறியது.


1000 கிலோவோல்ட்-ஆம்பியர் (kilovolt-ampere (KVA)) டீசல் ஜெனரேட்டர் செட்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. முன் அனுமதியின்றி இயக்கப்படும் கட்டுமான உபகரணங்களுக்கு (sound-emitting construction equipment) 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவை எழுப்பும் சப்தம், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.


Also Read | Russia: பேஸ்புக், டெலிகிராம் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது ரஷ்ய நீதிமன்றம்


கட்டுமான உபகரணங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட சத்தத்தை அதிகப்படுத்தினால், ரூ 50000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், அதோடு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று டிபிசிசி தெரிவித்துள்ளது.. அதே பகுதியில் இரண்டாவது முறையாக விதிகளை மீறினால், 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் விதிமுறைகள் மீறப்பட்டால், அபராதம் 1 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிடும். மேலும் அந்த பகுதிக்கு சீல் வைக்கப்படும் என்று திருத்தப்பட்ட விதிகளில் டிபிசிசி தெரிவித்துள்ளது.


மேலும், ஜெனரேட்டர் செட்களால் ஏற்படும் ஒலி மாசுபாட்டின் சிக்கலைச் சமாளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டிபிசிசி வெளியிட்டுள்ளது.  விதிகளில் உள்ள விதி, ஒலி மாசுபாட்டை உருவாக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்படும்.


தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட துறைகள் புதிய விதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தவும், மாதந்தோறு அறிக்கையை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


Also Read | ஜூஹி சாவ்லாவின் 5G வழக்கு; ₹20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR