முஸ்லீம்களுக்கு 50 மனைவி, 1050 குழந்தையையும் பெறுகின்றனர்: BJP MLA
முஸ்லீம்களுக்கு 50 மனைவிகள், 1050 குழந்தைகளை பெற்றுக்கொளவதாக பாஜக எம்.எல்.ஏவின் பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் கருத்தால் சர்ச்சை!!
முஸ்லீம்களுக்கு 50 மனைவிகள், 1050 குழந்தைகளை பெற்றுக்கொளவதாக பாஜக எம்.எல்.ஏவின் பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் கருத்தால் சர்ச்சை!!
உத்திரப்பிரதேச மாநிலம் பலியாவைச் சேர்ந்த சர்ச்சை கருத்துகளுக்கு பேர்போன பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் தற்போது "ஏராளமான மனைவிகளையும் குழந்தைகளையும் கொண்ட முஸ்லிம்களுக்கு "மிருகத்தனமான போக்கு" என தெரிவித்துள்ளது பெரும் சர்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; “ இஸ்லாமிய மதத்தில், மக்கள் 50 மனைவிகளை கொண்டுள்ளனர். 1,050 குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். இது பாரம்பரிய முறையல்ல, மாறாக இது மிருகத்தனமான வழக்கம். 2 முதல் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்வதே சமூகத்தில் இயல்பானதாக கருதப்படுகிறது ” என்று சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்துக்கு பல இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.
இவர் தொடக்கத்தில் மருத்துவர்கள் குறித்த சர்ச்சை கருத்தை தெரிவித்தார் சுரேந்தர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகளுடன் பேரம் பேசி வருவதால் அவர்கள் பேய்களாக மாறி வருகின்றனர். கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்துத்துவா கொள்கைகளை நிலைநிறுத்த ஓவ்வொரு இந்து தம்பதியும் குறைந்தபட்சம் 5 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.