இதற்கு முன்பு வேறு யாரும் செல்லாத இடத்தில் நாங்கள் தரையிறங்கப் போகிறோம், மென்மையான தரையிறக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரயான் 2 விண்கலம், நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும்.


சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர்  சரியாக நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிகழ உள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவிக்கையில்.,  "சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதால் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது.



நம் கையில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தையை கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க தடுமாறுவீர்கள். குழந்தை அங்கும் இங்கும் நகரும்போது அதை கீழேவிட்டுவிடாமல் கையாள மிகவும் கஷ்டப்படுவீர்கள் அல்லவா?. அதுபோல் தான் சந்திரயான் 2-ல் இருக்கும் விக்ரம் லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும். 


ஆனால், அதை உறுதியாக தரையிறக்க வேண்டும். இது நுட்பமானது, மற்றும் நுணுக்கமானது. அதனால்தான் அதனைச்சுற்றி 4 எஞ்சின்களுடன் நடுவில் ஒரு எஞ்சினையும் பொருத்தியுள்ளோம். இதற்கு முன்பு வேறு யாரும் செல்லாத இடத்தில் நாங்கள் தரையிறங்கப் போகிறோம், மென்மையான தரையிறக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது. நல்லிரவிற்காக காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.