புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இரண்டாவது அலையில் பல நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜனுக்கான தீவிர தட்டுப்பாடு (Oxygen Shortage) ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிர் இழக்கும் கொடுமைகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவையை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஏற்கனவே டெல்லி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டது.


தற்போது, மத்திய, மாநில அல்லது உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகள் யாராவது ஆக்ஸிஜனை பெறுவதிலோ, வழங்குவதிலோ தடையாக இருந்தால், அப்படிபட்டவர்களை தூக்கிலிடவும் தயாராக உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் சனிக்கிழமை கூறியது.


கொரோனா தொற்றால் (Coronavirus) தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக மகாராஜா ஆக்ரசென் மருத்துவமனை அளித்த புகாரை விசாரித்தபோது, நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வாறு தெரிவித்தது. 


ஆக்ஸிஜன் சப்ளைக்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை அளிக்குமாறு டெல்லி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட உயர் நீதிமன்றம், அப்படி செய்யும் நபரை நாங்கள் தூக்கிலிடுவோம் என்று கூறியது. 


ALSO READ: Remdesivir மருந்து குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த முக்கிய தகவல்


"நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்" என்று காட்டத்துடன் உயர் நீதிமன்ற பெஞ்ச் மேலும் கூறியது.


உள்ளூர் நிர்வாகத்தின் இப்படிப்பட்ட அதிகாரிகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி நீதிமன்றம் தில்லி அரசிடம் கூறியது. அப்படி செய்தால்தான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என உயர் நீதிமன்றம் விவரித்தது.


முன்னதாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ வசதிகளின் குறைபாடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.


"நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யுங்கள்" என தன் காட்டமான தொனியில் உயர் நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. 


ALSO READ: கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR