டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன
கொரோனா அலையின் இரண்டாவது பரவல் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பரவி வரும் டெல்டா ப்ளஸ் வகை கொரொனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அலையின் இரண்டாவது பரவல் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பரவி வரும் டெல்டா ப்ளஸ் வகை கொரொனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த COVID பணிக்குழு தலைவர் வி.கே. பால், கொரோனா வைரஸ் பரவும் விதத்தை கணிக்க முடியாதது என்பதோடு, திட்டமிட்ட, சிறந்த அணூகுமுறைகள் மற்றும் நடவடிக்கையின் மூலம் கொரோனா பரவலின் அடுத்த அலையில் இருந்து நாடு தப்பிக்க முடியும் என்பதால் எந்த COVID அலைக்கும் தேதி குறிப்பது நியாயமற்றது என்று திங்களன்று (ஜூன் 29) தெரிவித்தார்.
வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், நிதி ஆயோக் (Niti Aayog) உறுப்பினரான பால், புதிய மாறுபாடு அதிக அளவில் பரவக்கூடியது அல்லது தடுப்பூசி செயல்திறனைக் குறைக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலான எந்த அறிவியல் தரவுகளும் இல்லை என்று வலியுறுத்தினார்.
ALSO READ | Covishield, Covaxin: ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா திரிபுகளுக்கு எதிராக செயல்படும்
PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மற்றொரு அலை எந்த அளவிற்கு இருக்கும் என்பது பல காரணிகளைச் சார்ந்தது. இதில் COVID-19 தொற்று பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை, பரிசோதனை மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். இந்த நடவடிக்கைகளை திட்டமிட்டு சிறப்பாக மேற்கொள்ளும் போது, தொற்று பரவல் நிச்சயம் கட்டுபாட்டிற்குள் வரும் என நம்பிக்கை அளித்துள்ளார்.
"எந்தவொரு அலையும் ஏற்படுவதும், ஏற்படாததும் நம் கையில் உள்ளது. அடுத்த அலைக்கு எந்த தேதியில் ஏற்படும் என்பதை நிர்ணயிக்க இயலாது" என்று அவர் கூறினார்.
COVID -19 தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக, 50,000 என்ற அளவிற்கு கீழே பதிவாகிறது. இரண்டாவது COVID அலையின் உச்சத்தில் நான்கு லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ALSO READ | Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR