அக்டோபர் 3 முதல் 9 வரை லக்கிம்பூர் கெரியில் என்ன நடந்தது? முழுக்கதை
அக்டோபர் 3 ஆம் தேதி வன்முறை சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு இறந்தனர்.
புது டெல்லி: உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் லக்கிம்பூர் கெரி உள்ளது. டெல்லியின் எல்லையில் போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், இந்த மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வீர்பூர் மற்றும் டிகுனியா ஆகியவை முக்கியமானவை. பல்வீர்பூர் பகுதி உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் தொடர்புடையது. டிகுனியா வெளிசத்துக்கு வரக்காரணம் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா தான்.
அக்டோபர் 3 ஆம் தேதி வன்முறை சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு இறந்தனர். ஒருவேளை இந்த சம்பவம் சாதாரணமாக முடிந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஏனென்றால் ஜீப் ஏற்றி விவசாயிகள் நசுக்கிக் கொல்லப்பட்டனர் மற்றும் விவசாயிகளை நசுக்கிய அந்த ஜீப் மாநில உள்துறை அமைச்சரின் மகனுடையதாக இருந்தது.
அக்டோபர் 3:
அக்டோபர் 3 மதியம் நடந்த வன்முறைக்குப் பிறகு, அரசியலும் சூடுபிடித்தது. லக்கிம்பூர் கெரி பகுதிக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தனர். அவர்கள் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எப்படியோ சீதாபூரில் உள்ள ஹர்கானை வரை சென்றுவிட்டார். ஆனால் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு உ.பி. போலிஸ் நிர்வாகம் அவரை காவலில் வைத்தது. 3 ஆம் தேதி இரவு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சுற்றுப்பயணத்தை விட்டுவிட்டு, தலைநகரம் லக்னோ வந்தடைந்தார். இந்த விவகாரம் தொடர்பான அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ALSO READ | லக்கிம்பூர் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜார்
அக்டோபர் 4:
இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு, பல்வேறு வகையான வீடியோக்கள் வெளிவரத் தொடங்கின. அதனையடுத்து உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் பெயர் வெளிவரத்தொடங்கியது. விவசாயிகளை நசுக்கிய ஜீப்பில் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லவே இல்லை. அப்பொழுது அவர் பன்வீர்பூர் கிராமத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் இருந்தார். அங்கு நடைபெற்ற மல்யுத்த போட்டி நிகழ்ச்சி கலந்துக்கொண்டார் என விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.
விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாய்த் தலைமையில், விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவாரத்தை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை மற்றும் 45 லட்சம் நிதியுதவி அளிக்கவும் வேண்டும் என்றும், அதேநேரத்தில் இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை குற்றம் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட பிறகு, இறந்தவர்களின் உடலை குடும்பத்தார் வாங்கினர். ஆனால் அடுத்தடுத்து வீடியோ வெளியான பிறகு இந்த விவகாரம் காட்டுத்தீ போல நாடு முழுவதும் பரவியது.
அக்டோபர் 5:
அக்டோபர் 5 அன்று, ராகுல் காந்தி டெல்லியில் இருந்து லக்கிம்பூர் கெரிக்கு சென்று, பிரியங்கா காந்தியுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று அவர் எச்சரித்தார். இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் தவறு இருக்கிறது மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாய குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, நள்ளிரவில் குர்விந்தரின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி, விவசாய அமைப்பி தலைவர் ராகேஷ் திகைத், முக்கிய குற்றவாளியை சீக்கரமாக கைது செய்யாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்று உ.பி. அரசாங்கத்தை எச்சரித்தார்.
அக்டோபர் 6:
அக்டோபர் 6 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை தானாகவே கையில் எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதி நிர்ணயித்தது மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஒரே நாளில் லக்கிம்பூர் கெரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். எஸ்பி, பிஎஸ்பி, ஷிரோமணி அகாலிதளம், டிஎம்சி (TMC) முதல் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உள்துறை அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோசம் எழுப்பினர். எனினும், உள்துறை இணை அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா தனது மகன் நிரபராதி என்று கூறி வந்தார்.
ALSO READ | லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி
அக்டோபர் 7:
அக்டோபர் 7 விசாரணையில், உச்சநீதிமன்றம் உபி அரசை கடுமையாக சாடியது மற்றும் இந்த வழக்கில் விசாரணை எப்படி நடக்கிறது, இந்த வழக்கில் இதுவரை உபி போலீஸ் என்ன செய்தது, அக்டோபர் 8 க்குள் நிலை அறிக்கையை சமர்ப்பிக்கவும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு, மாலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் முக்கிய குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக அக்டோபர் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன் ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அக்டோபர் 8:
அஷிஷ் மிஸ்ரா அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 10 மணி வரை குற்றப்பிரிவு முன்பு ஆஜராகவில்லை. அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, நீதிமன்றம் உ.பி அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வேறு யாரவது செய்திருந்தால், இப்படிதான் பொறுமையாக அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்து கொண்டு இருப்பீர்களா? அந்த நபரை இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? இத்தனை மோசமான ஒரு சம்பவத்தை இப்படி தான் கையாளுவீர்களா? இந்த விவாகரத்தில் உத்தர பிரதேச அரசும், காவல்துறையும் சரியாக நடந்து கொள்ள வேண்டும். லக்கீம்பூர் விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது எங்களுக்கு திருப்தி இல்லை. உத்தரபிரதேச அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரம், ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உ.பி. மாநில அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து, பிற்பகலில் குற்றப்பிரிவு சார்பாக இரண்டாவது அறிவிப்பு ஒட்டப்பட்டது மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு முன் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அக்டோபர் 9:
அக்டோபர் 9 அன்று, 11 மணிகு முன், முக்கிய குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ரா தனது முகத்தை வெள்ளை கைக்குட்டையில் மறைத்தப்படி சரணடைந்தார். ஆனால் அவர் கைது செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறி. சம்பவ நாளில் ஆஷிஷ் மிஸ்ரா எங்கே இருந்தார், விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட ஜீப்பை யார் ஓட்டி போனார்கள். அதற்காக அங்கு போனது, இந்த சம்பவம் நடைபெற யார் காரணம் உட்பல பல கேள்விகளின் பட்டியல் அவரிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | லக்கிம்பூர் கொலை வழக்கு: உடல்நலக் குறைவு எனக்கூறி தப்பித்த பாஜக அமைச்சரின் மகன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR