லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி

8 போர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது இத்தனை மோசமான ஒரு சம்பவத்தை இப்படி தான் கையாளுவீர்களா? உத்தர பிரதேச மாநில அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 05:52 PM IST
லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி title=

புது டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வுக்கு இன்று லக்கிம்பூரில் விவசாயிகள் மீதான கொலைவெறி தாக்குதல் தொடர்பான சம்பவம் குறித்த விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உத்தர பிரதேச மாநில அரசின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜாராகி விளக்கம் அளித்தார். இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த சம்வம் குறித்து பார்ப்போம்.

உ.பி. அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சல்வே கூறியது, 

லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அறிக்கையும் நீமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது,. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இன்று அவர் நேரில் ஆஜராகவில்லை. நாளை காலை 11 மணிக்குள் அவர் ஆஜராகவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என விளக்கம் அளித்தார்.

உ.பி. அரசு வழக்கறிஞர் ஹரீஷ் சல்வே தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வேறு யாரவது செய்திருந்தால், இப்படிதான் பொறுமையாக அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்து கொண்டு இருப்பீர்களா? அந்த நபரை இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

ALSO READ |  Lakhimpur Kheri: கொல்லப்பட்ட விவசாயி உடலுக்கு நள்ளிரவில் நடந்த பிரேத பரிசோதனை

8 போர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது இத்தனை மோசமான ஒரு சம்பவத்தை இப்படி தான் கையாளுவீர்களா? இந்த விவாகரத்தில் உத்தர பிரதேச அரசும், காவல்துறையும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

லக்கீம்பூர் விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது எங்களுக்கு திருப்தி இல்லை. உத்தரபிரதேச அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட வேண்டும். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரம், ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உ.பி. மாநில அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தசரா விடுமுறைக்கு பின்னர், இன்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். 

ALSO READ |  லக்கிம்பூர் கொலை வழக்கு: உடல்நலக் குறைவு எனக்கூறி தப்பித்த பாஜக அமைச்சரின் மகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News