ராகுல் காந்திக்கு மட்டும் ஏன் சோதனை? கலங்கும் காங்கிரஸார்! வயநாடு கை கொடுக்குமா?
Rahul Gandhi And Wayanad Constituency : ராகுல் காந்தியின் தற்போதைய தொகுதியான வயநாட்டில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலைமை மாறக்கூடும்
புதுடெல்லி: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பது என்றும் நிலவும் ஒரு வித்தியாசமான போக்கு. இந்த ஆண்டு நடைபெறவிருக்கு நாடாளுமன்றத் தேர்தல், பலருக்கு கை கொடுக்கலாம், சிலருக்கு கையை விரித்துவிடலாம். பொதுவாக, மிகவும் பிரபலமானவர்களுக்கு அவர்களின் தொகுதியில் எப்போதும் செல்வாக்கு இருக்கும். சொல்வாக்கு இல்லாவிட்டாலும், அவர்கள் வெற்றி பெறுவதில் மாற்றம் இருக்காது.
ஆனால், நிலைமைகள் மாறுகின்றன, காட்சிகளும் கட்சிகளும் இடம் மாறுகின்றன. தேர்தல் ஜனநாயகத் திருவிழா அறிவிப்புக்கு முன்னரே பல்வேறு கட்சிகளின் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் தற்போதைய தொகுதியான வயநாட்டில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலைமை மாறக்கூடும் என தோன்றுகிறது.
நண்பனே பகைவனானால்?
கேரளாவின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ராகுல் காந்திக்கு அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐ கட்சியின் உறுப்பினரை, ராகுல் காந்தி எதிர்த்து போட்டியிட்டால் அது அவர்களின் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | துவாரகா... கடலுக்கடியில் பிரதமர் மோடி செய்த பூஜை... உங்களுக்கும் செல்ல ஆசையா
சிபிஐ தேர்தல் வியூகம்
குஜராத், கோவா, டெல்லி என பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் சிபிஐ, கேரளாவில் தனித்து போட்டியிடுகிறது
வயநாடு தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட்
காங்கிரஸ் கட்சிக்கு ஏன் சிபிஐ இப்படி ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது? கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் (எல்டிஎஃப்) அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மக்களவைத் தேர்தலுக்கான முக்கியமான நான்கு இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது.
அந்த நாலு பேரில், CPI கட்சியின் மூத்த தலைவர் அன்னி ராஜா வயநாடு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார். தற்போது வயநாடு தொகுதியின் எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ள நிலையில், காங்கிரஸை கலந்தாலோசிக்காமலேயே சிபிபை அந்தத் தொகுதியின் வேட்பாளரை அறிவித்துள்ளது, மீண்டும் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ