Hindutva: இந்துத்வா எதிர்ப்பு அவசியமா? எதிர்கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர்!

Prasanth Kishore On Election 2024 Results: இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?  வியூகம் அமைத்துக் கொடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2024, 01:06 PM IST
  • அயோத்தி ராமர் கோவில் திறப்பு
  • ராமர் கோவில் கட்டியது பாஜகவுக்கு ஆதரவை அதிகரித்துள்ளதா?
  • எதிர்வரும் தேர்தலில் மக்கள் எந்த பக்கம் சாய்வார்கள்?
Hindutva: இந்துத்வா எதிர்ப்பு அவசியமா? எதிர்கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர்! title=

புதுடெல்லி: இன்னும் சில மாதங்களில் ஜனநாயகத் திருவிழா தொடங்கிவிடும். இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், அரசு நிர்வாகம், பொதுமக்கள் என பலரும் தேர்தலை மையமாக வைத்து இயங்கும் போக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை எப்படி எதிர்கொள்வது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சி பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜகவின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளும் பொது மக்களும் தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் ஏற்பாடுகளை தீவிரபடுத்தி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில்  வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல அரசியல் நிபுணரும், தேர்தல் வியூகவாதியுமான பிரசாந்த் கிஷோர் எதிர்கட்சிகள் எவ்வாறு தேர்தல் வியூகம் அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்.

அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்

இந்துத்வாவுக்கும், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கும் தேர்தலில் முக்கிய பங்கு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். ராமர் கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது, மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

மேலும் படிக்க | அயோத்தி: பால ராமர் சிலையின் முக்கியமான சிறப்புகள்..!

பொதுத்தேர்தல் 2024 
இந்த பொதுத் தேர்தல் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல தேர்தல் நிபுணர் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாக்கம் 2024 தேர்தல் என்பது பிரதமர் மோடியை மையப்படுத்தியே நடக்கும் என்றும், மோடிக்கு ஆதரவு அல்லது எதிரான வாக்குகள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்று பிரசாந்த் கிஷோர் கருதுகிறார்.

பாஜகவின் தேர்தல் வியூகம்
இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆட்சிக் காலத்தில் பணி நடைமுறை, பிரதமர் என்ன செய்தார் அல்லது என்ன செய்யவில்லை என்பவற்றின் அடிப்படையிலேயே பொதுமக்கள் வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தலில் பாஜகவின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர், நூற்றுக்கு 38 பேர் இந்துத்துவாவை ஆதரிப்பவர்கள் என்று தெரிகிறது. இந்தப் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் 38 சதவிகிதத்தினர் என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் கட்சிக்கு எதிராக 62 சதவிகிதத்தினர் இருக்கின்றனர்.

எஞ்சிய இந்த 62 சதவிகிதத்தினரை எப்படி தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என்பதில் எதிர்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றியடைய முடியும். 

மேலும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் டெல்லி அரசு! கேஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை!

இந்துத்வா எதிர்ப்பு அவசியமா?
எதிர்கட்சிகள் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு பதிலாக, இந்துத்துவாவுக்கு ஆதரவாக இல்லாதவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அயோத்தி ராமர் கோயில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும், பாஜகவின் நம்பிக்கையின்படி, பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும் என்று பிரசாந்த் கிஷோர் கருதுகிறார்.

பாஜகவின் வாக்கு வங்கி 
பாஜகவின் வாக்கு வங்கி ராமர் கோயிலை அடித்தளமாக வைத்து மேலும் வலுப்படும் என்பதை மறுக்கமுடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது பாஜகவின் அடிப்படை கொள்கை மட்டுமல்ல, அரசியல் வியூகமாகவும் இருந்தது. அது நிறைவேறியதால், பாஜகவின் வாக்கு வங்கியும் வலுவாகிவிட்டது. அயோத்தியாவில் கோவில் கட்டியது கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களின் உற்சாகத்தை நிச்சயமாக அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதன் அடிப்படையில் பார்த்தால், பாஜகவிற்கான வாக்கு சதவீதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கோயில் கட்டுவதால் தான் பாஜகவில் இணைவதாக பலர் கூறி வருகின்றனர். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அயோத்தி ராமர் கோயில் பாஜகவுக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News