Budget 2024: இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல சாதனைகளை உருவாக்கவிருக்கிறார். தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பல சாதனைகளை படைக்கும் இந்திய நிதியமைச்சர் உருவாக்கப்போகும் சாதனைகளின் பட்டியலை தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழுநேர பெண் நிதியமைச்சர்
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், இதற்கு முன், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்யவிருப்பது இடைக்கால வரவு செலவுத் திட்டம் தான் என்றாலும், அவர் இந்த பட்ஜெட் தாக்கல் மூலம் பல புதிய பதிவுகளை ஏற்படுத்துகிறார்.


இடைக்கால பட்ஜெட் 2024  
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஐந்து முழு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்வார்.


முன்னாள் நிதியமைச்சர்களின் சாதனைகள்


பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை சீதாராமன் தாக்கல் செய்வதால், முன்னாள் நிதி அமைச்சர்களான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ​​ஆகியோரின் சாதனை பதிவுகளை தாண்டி புதிய சாதனையை படைக்கிறார். இந்தத் தலைவர்கள் தொடர்ந்து ஐந்து வரவு செலவுத் திட்டங்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, அந்த சாதனைகளை சமன் செய்த நிர்மலா சீதாராமன் தற்போது அவர்களின் சாதனைகளை பின்தள்ளிவிடுவார்.


நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 1959-1964 க்கு இடையில் ஐந்து ஆண்டு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.


மேலும் படிக்க | Budget 2024: ஜாக்பட் சம்பள உயர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்


அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்


முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். எந்தவொரு நிதியமைச்சரும் தாக்கல் செய்த அதிகபட்ச பட்ஜெட் இதுவாகும். இடைக்கால பட்ஜெட் உட்பட 6 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.


தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சீதாராமன், கிராமப்புறங்களை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்கலாம். 2023-24 நிதியாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் நான்கு சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவது இதற்கு ஒரு முக்கிய காரணம்.


இடைக்கால பட்ஜெட் 


2024-25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட், ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை செலவழிக்கும் உரிமையை அரசாங்கத்திற்கு வழங்கும்.


ஏப்ரல்  முதல் மே மாதத்திற்கு இடையே பொதுத்தேர்தல் நடைபெறும் என்ற நிலையில், திருமதி நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் கொள்கை மாற்றங்களோ, புதிய அறிவிப்புகளோ அல்லது திட்டங்களோ இருக்காது. கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இடைக்கால பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை என்று நிதியமைச்சர் மறுத்திருந்தார். இது பொதுத் தேர்தலுக்கு முன் அளிக்கப்படும் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கும் என்றார்.


இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஏப்ரல்-ஜூலை காலத்திற்கான செலவினங்களைச் சமாளிக்க நாட்டின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியை எடுக்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.


தேர்தல்  2024


பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், புதிய அரசாங்கம் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை மாதம் கொண்டு வரவுள்ளது.


பொதுவாக, இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய கொள்கை அறிவிப்புகள் இருக்காது என்றாலும், பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு எந்த தடையும் இல்லை.


மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ