Budget 2024: Budget 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expetations)
மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் சில நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கலாம். அவற்றில் ஃபிட்மெட் ஃபாக்டரின் அதிகரிப்பும் உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது அதிகரித்தால், ஊழியர்கள் பெறும் அடிப்படை சம்பளம் உயரும்.
இம்முறை அரசு பட்ஜெட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) உயர்த்தி அறிவிக்கும் என ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதன் மூலம் 2024 பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு
- ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
- அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் பேக்டரின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
பிட்மென்ட் ஃபாக்டரில் இருந்து சம்பள கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகின்றது?
- தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாக உள்ளது.
- உதாரணமாக, 4200 கிரேடு பேயில் ஒருவர் ரூ.15,500 அடிப்படை ஊதியம் (Basic Salary) பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அப்போது அவருடைய மொத்த சம்பளம் ரூ.15,500×2.57 அதாவது ரூ.39,835 ஆக இருக்கும்.
- இந்த ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் கோரி வருகின்றன.
- இந்த உயர்வால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.
48 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்
- மத்திய அரசின் அடிப்படை சம்பளத்தை கணக்கிடும் ஃபார்முலாவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதன் மூலம் சுமார் 48 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
- அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பதால், அவர்கள் பெறும் கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்.
- ஃபிட்மென்ட் ஃபேக்டரை மாற்ற வேண்டும் என மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அதை அறிவிக்கும் எண்ணத்தில் அரசு இருக்கக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இதனால் அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முன் பலன்களை பெற முடியும்.
ஃபிட்மென்ட் காரணி 2.57 -இல் இருந்து 3.68 சதவிகிதமாக அதிகரிக்கலாம்
2024-25 பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஃபிட்மெட் ஃபாக்டர் குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதத்தில் இருந்து 3.00 அல்லது 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் அடிப்படை சம்பளம் ரூ.8000 அதிகரிக்கும், அதாவது அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18000 -இல் இருந்து ரூ.26000 ஆக உயரும். ஆனால், இதுவரை இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ