Where To Watch New Parliament Inaugration Ceremony: டெல்லி சென்ட்ரல் விஸ்டா பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் பல மூத்த அமைச்சர்கள், 25 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், மத தலைவர்கள் மற்றும் பிற முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கிய நிகழ்வுகள் எப்போது?


நாளை காலை ஹவனம் மற்றும் சர்வமத பிரார்த்தனையுடன் விழா தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி முறைப்படி திறந்து வைக்கிறார். முக்கிய நிகழ்ச்சி மதியம் தொடங்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. 


பதவியேற்பு விழாவை எங்கே பார்ப்பது?


இந்த நிகழ்வு அனைத்து தூர்தர்ஷன் (DD) சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலிலும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் கண்டுகளிக்கலாம். 2020ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 


மேலும் படிக்க | வளர்ச்சி அடைந்த பாரதம்@2047... பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த 7 முதல்வர்கள்!


இடப்பற்றாக்குறையை போக்க...


மக்களவை செயலகத்தின்படி, இது சாதனையாக கூறப்படும் அளவிற்கு மிக விரைவாக கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 1927இல் கட்டப்பட்ட தற்போதைய கட்டடத்தை விட, புதிய நாடாளுமன்ற கட்டடம் அதிக இடவசதியை வழங்குகிறது. இடம் போதுமானதாக இல்லை என்றும், பழைய கட்டடத்தில் எம்.பி.,க்களுக்கு வசதியாக ஏற்பாடுகள் இல்லை என்றும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.


மொத்த இருக்கைகள்


புதிய கட்டடத்தில் இப்போது 888 உறுப்பினர்கள் இருக்க முடியும். தற்போதைய கட்டடத்தில் 543 உறுப்பினர்களுக்கு இடம் உள்ளது. புதிய ராஜ்யசபா கட்டடத்தின் இருக்கை வசதியும் 300 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டடத்தில் 250 எம்.பி.க்கள் தான் இருக்க முடியும். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடர் 1,280 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.



புதிய நாடாளுமன்ற வீடியோ


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று அக்கட்டடத்தின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். பிரதமர் மோடி பகிர்ந்துள்ள வீடியோவில்,"புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும்" என குறிப்பிட்டிருந்தார்.  


பதவியேற்பு விழாவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) 18 உறுப்பினர்கள் உட்பட 25 அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன. இவை தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத ஏழு கட்சிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ், பாஜக, 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இந்நிகழ்வை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன. 


மேலும் படிக்க | சோழ காலத்து செங்கோல்: போலியா... சுதந்திர அடையாளமா... - தலைவர்கள் சொல்வது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ