இந்தியா தற்போது கொரோனா வைரஸின் உச்சக்கட்ட பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களிடையே இருக்கும் ஒரு பொதுவான கேள்வி, கொரோனா வைரஸின் 3வது அலை எப்போது குறையும்? இந்தியா 3வது அலையின் உச்சக்கட்ட பாதிப்பை எட்டிவிட்டதா? அல்லது இப்போது தான் பாதிப்புகள் உயரத் தொடங்குகிறதா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Omicron: சாதாரண சளியா ஒமிக்ரான்? எச்சரிக்கும் நிதி அயோக்


இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனீந்திர அகர்வால் பேசும்போது, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கெரோனா வைரஸின் 3வது அலை படிப்படியாக குறையும் எனத் தெரிவித்துள்ளார். ஜனவரி 15 ஆம் தேதி முதல் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொடும் எனக் கூறியுள்ள அவர், டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற பெரிய நகரங்களில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்காக இருக்கும் என கூறியுள்ளார். 


ALSO READ | ஆக்சிஜன் இருப்பை பாதுகாத்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!


டெல்லியைப் பொறுத்தவரை தற்போது ஒரு நாளைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 22,000 ஆக உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் 40 ஆயிரம் வரை எட்ட வாய்ப்புள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். தங்களின் கணிப்பின்படி பாதிப்புகள் எண்ணிக்கை இருந்தால் மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 3வது அலை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ள பேராசிரியகள், தேர்தல் பிரச்சாரங்கள், ரயில் பயணங்களால் இந்த கணிப்பு மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 40 ஆயிரமாக உள்ளது. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR